ஆக்ரோஷம் எல்லாம் வேலைக்கு ஆகாது. நார்மலா இருங்க போதும். இந்திய கேப்டனை தாக்கி பேசினாரா ? வில்லியம்சன் – விவரம் இதோ

Williamson-1
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . இதுவரை நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது இந்திய அணி.

Ind-lose

ஆனால் தற்போது நியூசிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது இந்தியா. நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்கமுடியவில்லை. அதேநேரத்தில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் முதற்கொண்டு அந்த ஆடுகளத்தில் மிகச்சரியாக பேட்டிங் செய்தனர்.

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது : நாங்கள் பலமுறை தோல்வி கண்டுள்ளோம். தோல்வியில் கிடைத்த பாடங்களை வைத்து சரியாக ஆடுகிறோம். இந்திய அணி உலகின் மிகச்சிறந்த அணி. அந்த அணியை வெற்றி கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. விராட் கோலி இந்திய அணியை ஆக்ரோஷமாக வழிநடத்துகிறார் .
அதுவே அவருக்கு வெற்றியை கொடுக்கிறது.

Kohli

ஆனால் இயல்பாக ஆடினாலே நமக்கு வெற்றி கிடைக்கும். எப்போதும் ஆக்ரோஷம் கை கொடுக்காது என்று வில்லியம்சன் கூறினார். இந்த பேட்டியில் கோலியை பற்றி பேசிவிட்டு திடீரென ஆக்ரோசம் கூடாது என்று பேசியுள்ளார் கேன் வில்லியம்சன். இதனால் இந்திய கேப்டன் கோலியை குறிப்பிட்டு பேசி இருக்கிறாரோ என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

INDvsNZ

ஆனாலும் கிரிக்கெட் உலகில் வில்லியம்சன் ஒரு ஜென்டில்மேன் என்பது நாம் அறிந்தது அவர் கூறியதில் எந்தவித உள் அர்த்தமும் இருக்காது அவர் போட்டியின் நிலைமையை பற்றி கூறவே அவ்வாறு பேசியிருப்பார் என்பதே நிச்சயம் உண்மையாக இருக்கும்.

Advertisement