எனக்கும் கோலிக்கும் இடையேயான நட்பு எப்போது ஏற்பட்டது தெரியுமா ? – மனம்திறந்த ஜென்டில்மேன் வில்லியம்சன்

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவை முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் காலை 4 மணிக்கு துவங்க உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது : இந்திய ஒரு தரமான அணியாகும். சாம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்க தகுதி வாய்ந்த அணி அதுவே தான். ஏனெனில் அந்த அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களின் கொண்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடி ரன்களை குவிக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாது அணியும் நல்ல நிலையில் வைத்து இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு எதிராக நாங்களும் ரன் குவிப்பது அவசியம். எங்களது அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஹென்றிக்கு பதிலாக மாற்று வீரரை கண்டுபிடிப்பது கடினம் இருப்பினும் இது ஜேமிசனுக்கு ஒரு உற்சாகமான வாய்ப்பாக அமைய உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

மேலும் எனக்கும் வலிக்கும் இடையேயான நட்பு அண்டர் 19 காலத்திலிருந்து இன்று வரை சிறப்பாக தொடர்கிறது. சர்வதேச போட்டி, ஐபிஎல் என்று நாங்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். விராட்கோலி குறித்து நான் எப்பொழுதும் பாராட்டுகிறேன். அன்று ஒரு நாள் நாங்கள் பவுண்டரி லைனில் அமர்ந்து பேசியதும் சுவாரஸ்யமாக இருந்தது.

இருவரது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டோம் ஆட்டம் பற்றி எங்களது கருத்து ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் அணுகுமுறைதான் வேறு அன்று கோலியுடன் பேசியது எனக்கு உற்சாகம் ஊட்டும் வகையிலும், ஊக்கமளிக்கும் வகையிலும் இருந்தது என்று வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement