கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்திய அணிக்கு சப்போர்ட் செய்த வில்லியம்சன் – குவியும் பாராட்டு

williamson 1
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த இறுதிப் போட்டி நடைபெறும் முன்னரே பலரும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று கூறிய நிலையில் எளிதாக டிரா செய்ய வேண்டிய போட்டியை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு கொண்டு சென்றனர்.

nz

- Advertisement -

எனவே இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் மீது கடும் விமர்சனங்கள் இருந்து வருகிறது. மேலும் கேப்டன் மட்டுமின்றி அணியில் உள்ள வீரர்கள் பலரையும் நீக்க வேண்டும் என்று இந்திய அணிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இப்படி இந்திய அணியின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஒரு சிலர் இந்திய அணிக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்திய அணிக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஒரே ஒரு இறுதிப் போட்டியின் மூலம் வெற்றியாளரை தேர்வு செய்தது சரியான முடிவுதான். இந்த இறுதிப் போட்டியின் மூலம் இரண்டு அணிகளுமே பலத்தின் உச்சத்தை காட்ட நினைப்பார்கள். இறுதியில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றதை பெருமையாக நினைக்கிறோம்.

IND

இந்த ஒரு தோல்வியை மட்டும் வைத்து இந்திய அணியை விமர்சிப்பது தவறு. பல ஆண்டுகளாக வெற்றிகரமான அணியாக திகழும் இந்திய அணி இன்னும் பல கோப்பைகளை வெல்லும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணியின் தரத்தை ஒருபோதும் குறைத்து கூறக்கூடாது. இந்திய அணி முற்றிலும் உலகத்தரம் வாய்ந்த ஒரு அணி. இந்திய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

kohli 1

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலுமே இந்திய அணி பலமாக உள்ளது என வில்லியம்சன் சப்போர்ட் செய்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பரந்த மனசுடன் அவர் அளித்த இந்தப் பேட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement