இவரே உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இவர் பேட்டிங் செய்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் – வில்லியம்சன் வெளிப்படை

Williamson
- Advertisement -

நியுஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கேன் வில்லியம்சன். உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து அணியிடம் விதிமுறைப்படி தோற்று இருந்தாலும் அந்த தோல்வியை ஏற்றுக்கொண்ட வில்லியம்சன் மற்றும் நியூசிலாந்து அணி ரசிகர்களின் மனதை வென்றுவிட்டனர் என்றே கூறலாம்.

Williamson-1

- Advertisement -

அந்த அளவிற்கு தனது பக்குவமான மனநிலையுடன் அந்த தோல்வியை கடினமான வலி இருந்தும் அதனை வெளிக்காட்டாமல் தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜென்டில்மேன் வில்லியம்சன். அதன்பிறகு அவருக்கு நியூசிலாந்தில் மட்டுமல்லாமல் உலகஅளவில் ரசிகர்கள் அதிகரிக்க துவங்கினர். குறிப்பாக இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வீரராக வில்லியம்சன் பார்க்கப்படுகிறார்.

மேலும் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கேன் வில்லியம்சன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தற்போது அந்த அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னருடன் உரையாடினார். அப்போது உலகில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை தேர்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

Williamson-1

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்வதில் எனக்கு குழப்பம் இருக்கிறது. விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகிய இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் எனக்கு மிகப் பெரும் குழப்பம் உள்ளது. டிவில்லியர்ஸ் தற்போது உள்ளூர் கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறார்.இவர் சர்வதேச கிரிக்கெட் ஆடுவதில்லை.

- Advertisement -

ஆனால், என்னை பொறுத்தவரை இந்த காலத்தில் மிகச் சிறந்த வீரர் அவர் தான். அவர் ஒரு ஸ்பெஷல் வீரர். அதே நேரத்தில் கிரிக்கெட் உலகில் மிகவும் தரமான வீரர்கள் உள்ளனர். விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்து விளங்குகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகம் இருக்கிறது.

அவரது ஆட்டத்தையும், அவரது ஷாட்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதே நேரம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று கோலியை பாராட்டி கூறியுள்ளார் கேன் வில்லியம்சன்.

Advertisement