இன்றைய போட்டியில் நியூசிலாந்து தோல்வி உறுதி. முக்கிய வீரரே இவர்தான். இவரும் இன்று ஆடவில்லையாம் – விவரம் இதோ

Nz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

Shami 1

- Advertisement -

கடந்த மூன்று போட்டிகள் ஆகவே கடுமையான போராட்டத்தை அளித்துவரும் நியூசிலாந்து அணி இன்று போட்டியில் வெற்றி பெற்று தொடரின் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் இன்றும் அந்த அணியின் சோக நிலை தொடர உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கிய கேப்டன் வில்லியம்சன் சென்ற போட்டியில் அடைந்த காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த போட்டியில் 95 ரன்கள் அடித்து இறுதிவரை போட்டியை கொண்டு சென்ற அவர் இறுதி ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார் இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி தோற்ற பிறகும் அவருடைய இயல்பான மனநிலை அனைவரையும் கவர்ந்தது என்று கூறலாம்.

Southee

அந்த அணிக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று பார்க்கப்பட்ட அவரும் இன்றைய போட்டியில் விளையாட முடியாமல் போனதால் இந்திய அணி இன்று எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லியம்சன் விளையாடாததால் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement