டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : வில்லியம்சன் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் – விவரம் இதோ

Williamson

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

Nz vs Eng

இந்த போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் 13 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 1 ரன்னையும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது போட்டிக்கு முன்னர் இவரது இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடுவாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த இரண்டாவது போட்டியில் இவர் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இவரால் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து நியூசிலாந்து அணி நிர்வாகம் வெளியிட்ட கருத்தில் : வில்லியம்சனுக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது, அதனை மருத்துவர் குழு ஆராய்ந்து வருகின்றனர். அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Williamson 1

அவரோடு சேர்ந்து மிட்செல் சான்ட்னர் ஆள்காட்டி விரலில் காயம் அடைந்துள்ளார் என நியூசிலாந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வில்லியம்சன் காயத்தின் தன்மை பெரியதாக இருக்கும் பட்சத்தில் அவரால் உலகச் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

williamson

மேலும் வில்லியம்சனை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில் : காயத்தின் தன்மை பெரிதாக இல்லை இருப்பினும் அவர் இரண்டாவது போட்டியின்போது விளையாடி மீண்டும் வலி அதிகமாகும் பட்சத்தில் இது பெரிய பிரச்சனையாக மாறும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வில்லியம்சன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement