கோலியிடம் வம்பு வேண்டாம். அமைதியாக இருக்கலாம் என்று நடந்துகொண்ட மே.இ இ வீரர்கள் – விவரம் இதோ

williams-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது t20 இன் போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்சரை அடித்த கோலி அவரை பழிதீர்க்கும் விதமாக நோட்புக் செலிபிரேஷன் செய்தார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இந்த செலிபிரேஷன்.

Kohli

2017 ஆம் ஆண்டு கோலியின் விக்கெட்டை வீழ்த்திய போது வில்லியம்சன் அவரை நோக்கி நோட்புக் செலிபிரேஷன் செய்ததால் கோலி அதனை நியாபகம் வைத்து முதல் போட்டியில் திரும்ப அவருக்கு செய்தார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய வில்லியம்சன் அதனை எவ்வாறு கொண்டாடப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வாய் மீது கை வைத்து அமைதியாக கொண்டாடினார்.

மேலும் அந்த அணி வீரர்களையும் அவர் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். வில்லியம்ஸ் கொண்டாட்டம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கோலியிடம் வம்பு வைத்துக் கொண்டால் அவர் மீண்டும் வரும் போட்டிகளில் அதனை வேறு மாதிரி வெளிப்படுத்துவார் என்பதால் இந்த அமைதியான கொண்டாட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடை பிடித்து உள்ளனர் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் வில்லியம்ஸ் இவ்வாறு கொண்டாடியதுக்கு பின்னரும் கோலியை கிண்டல் செய்யும் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது.

மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டும் கோலி அவருக்கு எதிராக யாரேனும் விமர்சையாக நடந்தால் அதனை திருப்பிக் கொடுத்து பழக்கப்பட்டு வருவதால் கோலியிடம் வம்பு வைக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் அமைதியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் நாளை மறுதினம் நடைபெற உள்ள போட்டி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -