ஒரு மேட்ச் ஜெய்க்கிறதே பெருசு.. இந்தியாவை வெல்ல இதைத் தான் செஞ்சேன்.. தொடர்நாயகன் வில் எங் பேட்டி

Will Young
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த 3 போட்டிகளிலும் மோசமாக விளையாடிய இந்தியா அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.

மறுபுறம் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒய்ட்வாஷ் செய்த முதல் அணியாக நியூசிலாந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று 224 ரன்கள் குவித்த வில் எங் முக்கிய பங்காற்றினார். அதனால் இந்த சரித்திர வெற்றியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

- Advertisement -

நியூஸிலாந்து நாயகன்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிகப்பெரிய வெற்றி. முதலில் ஒரு அணியாக இங்கே வந்த போது தொடரின் துவக்கத்தில் ஒரு போட்டியில் வென்றாலே பெரியது என்று மனதில் நினைத்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் வென்ற எங்களுடைய வீரர்களால் பெருமைப்படுகிறேன். வெற்றியில் எங்கள் வீரர்கள் மற்றும் என்னுடைய பங்களிப்புக்காக பெருமைப்படுகிறேன்”

“நான் அனைத்தையும் எளிதாக பின்பற்ற விரும்பினேன். முக்கிய நேரங்களில் என்னுடைய தடுப்பாட்டத்தை நான் நம்ப வேண்டியிருந்தது. முக்கிய நேரங்களில் நான் நீண்ட நேரம் விளையாடி ரன்கள் குவிக்க விரும்பினேன். அப்படி ரன்கள் குவிக்க விரும்பினால் நான் என்னுடைய தடுப்பாட்டத்தை நம்பி தெளிவான மனதுடன் விளையாட வேண்டும். அதைப் பின்பற்றி இங்கே பதிவு செய்துள்ள வெற்றியால் கிடைத்த நினைவுகளை எங்களுடைய வீரர்களுடன் இணைந்து கொண்டாட உள்ளேன்”

- Advertisement -

இந்தியாவை சாய்த்த நியூஸிலாந்து:

“அதற்காகத் தான் நாங்கள் விளையாடுகிறோம். இது சிறப்பான உணர்வு வில்லியம்சன் வரும் போது நான் மூன்றாவது இடத்தில் விளையாடுவேனா என்பது தெரியவில்லை. அது அடுத்த தொடர் நடைபெறும் போது என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் வில்லியம்சன் போன்ற முக்கிய வீரர் இல்லாமலேயே நியூசிலாந்து இத்தொடரில் வென்றுள்ளது.

இதையும் படிங்க: காலியாகும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு? ஃபைனல் வெல்ல இந்தியா செய்ய வேண்டியது இதோ

அந்தளவுக்கு இத்தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடுவது என்றே சொல்லலாம். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய மூத்த வீரர்கள் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறியது தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் அவர்கள் பேசாமல் ஓய்வு பெறலாம் என்று இந்திய ரசிகர்களே திருப்தியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement