இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர்கள் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர்.
அத்துடன் நிறைய உலக சாதனைகளையும் படைத்துள்ள அவர்கள் டெஸ்ட் மற்றும் டி20 ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மறுபுறம் வயதைக் காரணமாக வைத்து 2027 உலகக்கோப்பைக்கு முன் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகின்றது.
காலம் கடந்த அசத்தும் விராட், ரோஹித்:
ஆனால் அதற்கெல்லாம் அசராத அவர்கள் கடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். அதன் காரணமாக ஐசிசி தரவரிசையில் ரோஹித் சர்மா, விராட் கோலி உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களாக முன்னேறி தங்களை கழற்றி விடத் துடிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அதே வேகத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா நீண்ட காலம் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக நியூஸிலாந்து வீரர் வில் எங் தெரிவித்துள்ளார். எனவே எதிரணியாக இருந்தாலும் அவர்களைப் பார்த்து தம்மைப் போன்ற நியூசிலாந்து வீரர்கள் கற்றுக் கொள்வதாகவும் எங் தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் ஒருநாள் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.
பாத்து கத்துக்கிறோம்:
“விராட் ஹோலி, ரோஹித் சர்மா அற்புதமான வீரர்கள். உலகக் கிரிக்கெட்டில் அவர்கள் மிகவும் நீண்ட காலமாக தங்களது ஆட்டத்தில் மேலே இருந்து வருகிறார்கள். அவர்கள் நான் பார்க்கக்கூடிய வீரர்கள். நியூசிலாந்து அணிகள் இருக்கும் மற்ற வீரர்களும் அவர்களை நிறைய பார்க்கிறார்கள். நாங்கள் எப்போதுமே அவர்களை போன்ற வீரர்களைப் பார்த்து வளர்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: எனக்கு எப்போவுமே ரோஹித் கேப்டன் தான்.. 2024இல் சொன்னதை செஞ்சு காட்டுனாரு.. ஜெய் ஷா நெகிழ்ச்சி
அத்துடன் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தேவையான அனுபவத்தை இந்தியாவுக்கு எதிரான தொடரில் கற்றுக் கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா – நியூஸிலாந்து அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



