3வது டெஸ்டில் கோலி விளையாடுவதில் சந்தேகம் .! இதுதான் காரணமா .?

kohli sad

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே தழுவியது இந்த தோல்வியின் வருத்தத்தில் இருந்து இன்னும் மீளாத இந்திய அணி அடுத்த சோகத்தை சந்தித்து உள்ளது எனவே கூறலாம் ஆம் இந்திய அணிய கேப்டன் கோலி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

kohli 1

இந்திய அணியின் கேப்டன் கோலி மட்டுமே தற்போது உள்ள இந்திய அணியில் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் இந்நிலையில் அவர் கீழ்முதுகில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார் நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் கடைசி இன்னிங்சில் கூட நான்காவது வீரராக கோலி களமிறங்க வில்லை இதற்கும் அவருக்கு ஏற்பட்ட காயம் தான் காரணம். இந்திய அணி பீல்டிங் செய்யும்போது கூட அவர் குறிப்பிட்ட சில நேரம் பீல்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பொதுவாகவே பிட்னெஸ் விஷயத்தில் கண்டிப்பானவர் கோலி இதனால் அவர் பர்ஹிங்காமில் நடைபெற இருக்கும் 3வது போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வியெழுந்த நிலையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் தன் காயம் தனக்கு சற்று வலியையே தருகிறது என்றாலும் 5 அல்லது 6 நாட்களில் முழுமையாக குணமடையும் என்று நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

kohli 3

தொடர் தோல்வியை சந்தித்து வரும் இந்நிலையில் விராட் கோலி 3வது போட்டியில் பங்கேற்க வில்லை என்றால் அது இந்திய அணிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தற்போது இந்திய அணியின் முதுகெலும்பே கோலி தான் அவர் இல்லாமல் போட்டியை சந்திக்கும் நிலை வரக்கூடாது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.