IND vs ENG : கடைசி டெஸ்ட் ரோஹித் பங்கேற்பாரா? இல்லைனா பும்ரா கேப்டனா? – கோச் டிராவிட் அளித்த பதில்

Dravid
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 1 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக ஜூலை 1-ஆம் தேதி கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விராட் கோலி தலைமையில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் பதம்பார்த்த இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது கரோனா பரவல் ஏற்பட்டதால் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

indvseng

- Advertisement -

எனவே தற்போது பர்மிங்காம் நகரில் நடைபெறப்போகும் அந்த தொடரின் கடைசி போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான அணியாக மாறியுள்ளது. அதானல் இப்போட்டியில் வென்று குறைந்தது தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர்வதற்காக அந்த அணி போராடும் என்பதால் இந்தியாவின் வெற்றி சவாலாகியுள்ளது.

ரோஹித் வருவாரா:
மறுபுறம் அப்போதிருந்த விராட் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி மாறிப்போய் தற்போது ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் என்று மாறியுள்ளது. அதில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுவரை வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டுமே வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ள ரோகித் சர்மா முதல் முறையாக இந்த போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழிநடத்தி வெற்றிக்காக போராட உள்ளார். இப்போட்டிக்கு தயாராகும் வகையில் கடந்த வாரம் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக நடந்த 4 நாட்கள் பயிற்சி போட்டியில் களமிறங்கிய அவர் துரதிஷ்டவசமாக கரோனா ஏற்பட்டதால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

Jasprith Bumrah Rohit Sharma Wisden.jpeg

அதனால் கடந்த 2 – 3 நாட்களாக தனிமையில் இருக்கும் அவர் இந்த போட்டி தொடங்க இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் குணம் அடைந்தாரா இல்லையா என்ற கேள்வி நிலவி வருகிறது. எப்படியும் போட்டி துவங்குவதற்குள் அவர் குணமடைந்து விடுவார் என்று இந்திய அணி நிர்வாகம் நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அவர் களமிறங்க முடியாமல் போனால் ரிஷப் பண்ட் அல்லது ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேப்டனாக செயல்படுவார் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

- Advertisement -

டிராவிட் பதில்:
அதில் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக ரிஷப் பண்ட் சொதப்பியதால் ஏற்கனவே கேஎல் ராகுல் காயத்தால் விலகியதால் வேறு வழியின்றி ஜஸ்பிரித் பும்ரா தான் இப்போட்டியில் இந்தியாவை வழி நடத்துவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த முக்கிய போட்டியில் ரோகித் சர்மா குணமடைந்து வருவாரா என்ற கேள்விக்கும் பும்ரா கேப்டனாக செயல்படுவாரா என்ற கேள்விக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். இது பற்றி இன்று நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

Dravid

“ரோஹித் சர்மாவை எங்களது மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் இதுவரை இப்போட்டியில் இருந்து வெளியேறவில்லை. அடுத்த கட்ட பரிசோதனையில் அவருக்கு எதிர்மறை முடிவு வரவேண்டும். எங்களுக்கு இன்னும் 36 மணி நேரங்கள் எஞ்சியுள்ளதால் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்று இரவும் நாளை காலையும் அவரை பரிசோதித்து மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையின் படி இறுதி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

- Advertisement -

அதேபோல் பும்ரா அடுத்த கேப்டனா என்ற கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “உங்களின் இந்த கேள்விக்கு இந்திய அணி நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக பதிலளித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதைத் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா அறிவிப்பாரா என்று தெரியாது. ஆனால் ரோகித் பற்றிய முடிவில் தெளிவு கிடைத்ததும் அதிகாரபூர்வ நிர்வாகிகள் இதுபற்றி தெரிவிப்பார்கள். இது பற்றிய அறிவிப்பை வெளியிட எனக்கு உரிமையில்லை” என்று கூறினார்.

dravid

அத்துடன் தாம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கடந்த 6 – 7 மாதங்களில் நிறைய கேப்டன்களையும் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் காயமடைவதையும் பார்ப்பதாக கூறும் ராகுல் டிராவிட் வீரர்களின் பணிச் சுமையையும் சூழ்நிலைகளையும் சமாளிப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : சதம் அடித்த தீபக் ஹூடாவிற்கு மட்டுமல்லாமல் இவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு குடுங்க – யுவ்ராஜ் சிங் வேண்டுகோள்

அதேபோல் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் தோற்ற பாடத்தை நினைவில் வைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இப்போட்டியில் வெல்வதற்கு முயற்சிப்போம் என்றும் கூறினார்.

Advertisement