கோலி குடிக்கும் தண்ணீர் பாட்டலின் விலை..! எவ்வளவு தெரியுமா..? பார்த்த ,நீங்களே அசந்துடுவீங்க..!

virat

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. மிகச்சிறந்த பேட்ஸ்மனான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மிஷின். விராட்கோலி எப்பொழுதும் தனித்து தெரிபவர். பெரும்பாலும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் மிகவும் தரமான மற்ற விலையுயர்ந்த பொருட்களாகவே இருக்கும்.

kohli

விராட்கோலி எப்பொழுதும் தன்னுடைய உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். இவரது ஆரோக்கியமான உடல்நலமே இவர் இந்திய அணியில் நீண்டநாட்களாக தொடர்ந்து பயணிக்க மிகமுக்கிய காரணம்.

kohli

சிலகாலங்களுக்கு முன்னிலிருந்தே விராட்கோலி நொறுக்கு தீனிகளை தின்பதை தவிர்த்து விட்டார். மேலும் தேவையற்ற கொழுப்புகளை உடம்பில் தக்கவைக்கும் எந்தவொரு உணவையும் அவர் உண்ணுவதில்லை. அதற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளையே அவர் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் உட்கொண்டு வருகின்றார்.

Dhoni

இந்நிலையில் அவர் குடிக்கும் தண்ணீர் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் விராட்கோலி பயன்படுத்தும் குடிக்கும் நீரானது பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றதாம்.

உலகின் மிகவும் தரமான மற்றும் அதிகவிலை கொண்ட இந்த ஒருலிட்டர் குடிநீரின் விலை மட்டும் சுமார் 600 ரூபாயாம்.உலகின் மிகவும் விலையுயர்ந்த இந்த குடிநீர் இந்தியாவில் கிடைப்பது அரிதாம்.

virat kohli

விராட்கோலி உலகில் எந்த நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும் அவர் தன்னோடே இந்த இறக்குமதி செய்யப்பட்ட குடிநீரை கொண்டு செல்வாராம். தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை தனியே ஒதுக்கி அவர் இந்த இறக்குமதி செய்யப்பட்ட குடிநீருக்கு செலவு செய்து வருகின்றாராம்.