இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இவர் மாறுவாரா.? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீராக களமிறங்கினார். இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான 291 வீரர் இவராவார். மேலும், தனது முதல் போட்டியின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.

pant

விக்கெட் கீப்பிங்கிலும் இரெண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 கேட்ச்களை அவர் பிடித்தார். ஒட்டுமொத்தமாக அந்த போட்டியில் சிறப்பாகவே அவர் செயல்பட்டார். அறிமுக போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற மற்றொரு சாதனையையும் அவர் தன் வசப்படுத்தினார். அவரது ஆட்டம் இந்திய அணியின் நிர்வாகம் மற்றும் ராசிகர்களை ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு நிரந்தர கீப்பர் இல்லாமல் இருந்தது. இப்போது இவரின் வருகை, இவர் தொடர்ந்து இதுபோன்று சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக மாற இவருக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. ஏனென்றால், பண்ட்-ன் வயது தற்போது 20 மட்டுமே. எனவே இவரால் அதிக ஆண்டு கிரிக்கெட் விளையாட முடியும்.

pant 2

இவருக்கு அணியில் தொடர்ந்து வாய்பளித்தால் அது அவருக்கும் நல்லது, இந்திய அணியின் எதிர்கால டெஸ்ட் போட்டிக்கும் நல்லது என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஏனெனில், நீண்ட காலம் விளையாட கூடிய விக்கெட் கீப்பர் கிடைத்தால் அவருக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவம் நிச்சயம் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, இவர் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக மாறுவாரா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement