சென்னை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தவறு. மே.இ வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்த – ஐ.சி.சி

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது அபராதம் விதித்துள்ளது.

அதன் காரணம் யாதெனில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் பந்து வீசுவதற்கு கொடுக்கப்பட்ட கால நேரத்தை தாண்டி பந்துவீசி முடிக்க அவர்கள் தாமதப்படுத்தியதன் காரணமாக அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி 50 ஓவர்கள் வீச வரையறுக்கப்பட்டிருக்கும் நேரத்தை விட 4 ஓவர்கள் அவர்கள் வீசுவதற்கு அதிகமாக எடுத்துக் கொண்டனர்.

Pant 1

அதனால் ஒரு ஓவருக்கு 20% வீதம் போட்டி ஊதியத்தில் இருந்து வெஸ்ட் வீரர்கள் அனைவருக்கும் 80% அபராத தொகையாக நிர்ணயித்தது ஐசிசி. போட்டி முடிந்ததும் இது குறித்து பேசிய அம்பயரிடம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் தவறை ஒப்புக்கொள்வதாகவும், அபராத விதிமுறைக்கு கட்டுப்பட்டு சம்மதம் தெரிவித்து சென்றதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement