2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கா இந்த நிலைமை? – புலம்பி தள்ளும் ரசிகர்கள். என்ன நடந்தது?

Jason-Holder
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெற்ற வேளையில் மீதமுள்ள நான்கு இடங்களுக்கு 8 அணிகள் மத்தியில் போட்டி நிலவியது. அதன் அடிப்படையில் தற்போது தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று முடித்துள்ளன. அப்படி இன்றுடன் நடைபெற்று முடிந்த இந்த தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் மீதமுள்ள நான்கு இடங்களுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது இந்த தொடரானது அடுத்த சுற்றுக்கு நகர்ந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்றுப்போட்டியில் பங்கேற்ற சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் இந்த தகுதிச்சுற்றுப் போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்து தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த உலககோப்பை தொடரானது மிகவும் சோதனை களமாகவே மாறி உள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

Paul Sterling

இந்நிலையில் இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்ததால் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு அயர்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட அயர்லாந்து அணியானது ஒரு ஓவர் முன்கூட்டியே இலக்கினை எட்டி அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்து அடுத்த சுற்று தகுதியாகி உள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய அணியாக பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்த ஆண்டு இளம் வீரர்களுடன் களமிறங்கிய வேளையில் தற்போது அடுத்த சுற்றுக்கு கூட முன்னேறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பயிற்சிக்கு இடையூறு செய்த ரசிகர்கள், அன்பால் கட்டிப்போட்ட கிங் கோலி – கூடவே கிடைத்த நல்ல மழை செய்தி

மேலும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஜாம்பவான் அணி இப்படி தகுதிச்சுற்றோடு வெளியேறியதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் ரசிகர்கள் தங்களது புலம்பல்களை சமூகவலைதளம் மூலம் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement