தெறிக்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி. தேறுமா இந்திய அணி ? – பெரிய டார்கெட் செட் செய்து அசத்தல்

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Pooran

அதன்படி தற்போது முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் 5 முடிவில் விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பூரான் 89 ரன்கள் அடித்தார். 5 ஆவது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிய பொல்லார்ட் மற்றும் பூரான் ஜோடி 135 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய பூரான் 64 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது 74 ரன்களில் 3 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 110 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியை திணறடித்தது.

Pollard 1

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கினை எதிர்த்து இந்திய அணி தற்போது விளையாட தயாராகி வருகிறது. இது பெரிய இலக்காக இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் கட்டாக் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதாலும், இந்திய அணி சேஸிங்கில் சிறப்பான அணி என்பதாலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் போட்டியின் முடிவில் தான் யார் கோப்பையை கைப்பற்ற போகிறார்கள் என்று தெரியும்.

Advertisement