3 விக்கெட் 207 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த ரசல்.. மாஸ் கம்பேக்.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஓடவிட்ட வெ.இ

Andrew Russell
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 2023 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் நடப்பு சாம்பியனாக களமிறங்கி தோல்வியை சந்தித்து வெளியேறிய இங்கிலாந்தை தோற்கடித்து சிறப்பான கம்பேக் கொடுத்தது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இவ்விரு அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 12ஆம் தேதி துவங்கியது. பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ரசல் கம்பேக்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த பில் சால்ட் 40 (20), கேப்டன் ஜோஸ் பட்லர் 39 (31) ரன்கள் எடுத்தனர். ஆனால் அவர்களை தவிர்த்து லிவிங்ஸ்டன் 27, பென் டூக்கெட் 14, வில் ஜேக்ஸ் 17, ஹரி ப்ரூக் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரெண்டன் கிங் 22 (12) கெய்ல் மேயர்ஸ் 35 (21) ஷாய் ஹோப் 36 (30) என டாப் 3 பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் நிக்கோலஸ் பூரான் 13, ஹெட்மேயர் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் கடைசி நேரத்தில் ரோவ்மன் போவல் அதிரடியாக 31* (15) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 29* (14) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக 18.1 ஓவரிலேயே 172/6 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்தை இப்போட்டியிலும் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 29* (14) ரன்களை 207.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் வெளுத்து வாங்கி முக்கிய பங்காற்றிய ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 3 விக்கெட் 207 ஸ்ட்ரைக் ரேட்டில்.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஓடவிட்ட ரசல்.. 2 வருடம் கழித்து மாஸ் கம்பேக்

2016 டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் பணத்திற்காக தேசிய அணியை மறந்து ஐபிஎல் போன்ற தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்து கிடப்பதை பார்த்து மீண்டும் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்த அவர் 2 வருடம் கழித்து இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அதில் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அவர் அபாரமான கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement