ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில்..! டிராவிட் பெயர் சேர்ப்பு..! சச்சின் பெயர் சேர்க்கவில்லை..! ஏன் தெரியுமா..? – காரணம் இதுதான்..?

sachin

கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர், காட் ஆப் கிரிக்கெட், மாஸ்டர் பிளாஸ்டர் என்று பல புகழை கொண்டவர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் பரிணாமத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்த சச்சினிற்கு ஐ சி சி “ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் இடமளிக்காமல் இருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
sachinspinn
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர்ர் ராகுல் ட்ராவிட்’ ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் இணைக்கப்ட்டு ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணைந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னாள் இந்த பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான பிஷன்சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெறுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், இந்த பட்டியலில் சச்சினின் பெயர் இன்னும் இடம்பெறாதது ஏன் என்று அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்தது.

“ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றால் ஒரு பேட்ஸ்மேனாக ஒரு நாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும். மொத்தமாக 20 சதங்கள் அடித்திருக்க வேண்டும். இந்த விதிப்படி சச்சின் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 18,436 ரன்கள் குவித்து 49 சதங்கள், 96 அரைசதங்கள் அடித்துள்ளார்.எனவேய ஐசிசி விதியின்படி சச்சின் இதற்கு தகுதி பெற்றுள்ளார்.

ஐசிசியின் மற்றுமொரு விதிப்படி ஹால் ஆப் ஃபேமுக்கு இடம்பெற வேண்டும் என்றால் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற ஒரு விதியும் இருக்கிறது. அதே போல அந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாதவராகவும் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதிகளில் ஒன்றாகும். ஆனால், சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு கடந்த 2013, நவம்பர் 16-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

என்வே, இந்த விதிமுறைகளின்படி, சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று இன்னும் 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை. அதனால் தான் இந்த ஆண்டு ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் சச்சின் பெயர் இடம்பெறவில்லை. ஒருவேளை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் கழித்து சச்சினி பெயர் பரிந்துரைகப்பட்டால் சச்சினின் பெயர் ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.