அவ்ளோ ஒர்த் கிடையாது, ஃபைனல் வரை போனதே கடவுள் புண்ணியம் – பாகிஸ்தானை விளாசி முகமது அமீர் பேசியது என்ன

Mohammed Amir PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை 2010க்குப்பின் 2வது முறையாக வென்ற இங்கிலாந்து வெற்றிகரமான அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை சமன் செய்து சரித்திரம் படைத்துள்ளது. மறுபுறம் 2009க்குப்பின் 2வது கோப்பை வெல்வதற்கு அதிர்ஷ்டத்தை கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. ஏனெனில் ஆரம்பத்திலேயே பரம எதிரி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் கதை முடிந்ததாக கருதப்பட்ட அந்த அணி கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்தையும் வீழ்த்தியது.

PAK vs ENG

- Advertisement -

முன்னதாக 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இதே போல் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கடைசி நேரத்தில் மீண்டெழுந்து அதிர்ஷ்டத்துடன் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து சாய்த்து கோப்பையை வென்றது. அந்த வகையில் இம்முறையும் பாகிஸ்தான் ஃபைனலுக்கு வந்ததால் இங்கிலாந்தை தோற்கடித்து 1992 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்பினார். ஆனால் அதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் பந்து வீச்சில் உயிரை கொடுத்து போராடிய பாகிஸ்தான் பேட்டிங்கில் 150 ரன்கள் எடுக்க தவறியதால் பரிதாபமாக தோற்றது.

கடவுள் புண்ணியம்:

ஆனால் கடைசி நேரத்தில் ஷாஹீன் அப்ரிடி காயத்தால் வெளியேறியதே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கேப்டன் பாபர் அசாமும், சோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் ரசிகர்களும் சமாளித்து வருகிறார்கள். அதை விட நாங்களாவது ஃபைனலுக்கு தகுதி பெற்று இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் நீங்கள் ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் அரையிறுதியில் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் மோசமாக செயல்பட்டு இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதாக வேண்டுமென்றே அந்நாட்டவர்கள் இந்தியாவை வம்பிழுத்து வருகிறார்கள்.

Pakistan

அத்துடன் ஜிம்பாப்பே, நெதர்லாந்து போன்ற கத்துக் குட்டிகளை அடித்து செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா ஃபைனலில் எங்களுடன் மோதுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் விமர்சித்தார்கள். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து தோற்கடித்த அதிர்ஷ்டத்தால் பாகிஸ்தான் இந்தளவுக்கு வந்ததே தவிர உண்மையாக ஃபைனலில் விளையாடும் அளவுக்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை என்று நட்சத்திர வீரர் முகமது அமீர் கூறியுள்ளார். இந்த உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி தேர்வில் தம்மை போன்ற முக்கிய வீரர்களை கழற்றி விட்டு சுமாரான வீரர்களை தேர்வு செய்ததால் ஆரம்ப முதலே அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் அவர் ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு பின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உண்மையை சொல்ல வேண்டுமெனில் நாம் இறுதி போட்டியில் விளையாடியது மிகப்பெரியதாகும். நாம் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை பெறவில்லை. குறிப்பாக நாம் எப்படி ஃபைனலுக்கு தகுதி பெற்றோம் என்பதை உலகமே அறியும். அங்கே அல்லாஹ் நமக்கு உதவி செய்தார். நமது பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளைப் பார்த்தாலே முடிவு என்ன உங்களால் புரிந்து கொள்ள முடியும். சிட்னியில் நாம் அவுட்டான போதே இது நடைபெறும் என்பது தெரியும். மேலும் இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட மெல்போர்ன் பிட்ச் இப்போட்டியிலும் பயன்படுத்தப்பட்டால் பாகிஸ்தான் நிச்சயம் தடுமாறும் என்று ஆரம்பத்திலேயே நான் கூறியிருந்தேன்”

Amir

“அது தான் நடந்துள்ளது. நாம் அனைவரும் முகமத் ஹாரிஸ் போராடியதைப் பற்றி பேசுகிறோம். ஆனால் அந்தப் போராட்டத்தை நீங்கள் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் அடில் ரசித்தை எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவர் இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். ஆனால் இது போன்ற பிட்ச்களில் அவ்வாறு அவுட்டாகி நீங்கள் அடுத்து வரும் வீரருக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியாது. மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய அனுபவத்தை காட்டி போட்டியை விழிப்புணர்வுடன் விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement