IND vs BAN : பாவம் டெத் பவுலர் யாருனு அவருக்கே தெரியல – ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் மற்றும் இந்திய அணியை விளாசும் முகமது கைஃப்

Kaif-and-Rohit-Dravid
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா டிசம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் வங்கதேச பவுலர்களின் அற்புதமான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. ரோகித், சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் அவுட்டான இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

IND vs BAn

- Advertisement -

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேசமும் முதல் 40 ஓவர்களில் தரமாக செயல்பட்ட இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து என 136/9 தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் இந்தியாவின் வெற்றி உறுதியானாலும் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாரா வகையில் நங்கூரமாக நின்ற மெஹந்தி ஹசன் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி முஸ்தஃபீசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற வைத்தார்.

மோசமான டெத் பவுலிங்:

மறுபுறம் டெயில் எண்டர்களான மெஹந்தி ஹசன் 38* (39) ரன்களும் முஸ்தபிஷூர் ரகுமான் 10* (11) ரன்களும் எடுத்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைக்கும் அளவுக்கு கடைசி 6 ஓவரில் மோசமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் ரசிகர்களை தலை குனிய வைத்தனர். குறிப்பாக 9 விக்கெட்டுகளை சாய்த்ததால் வெற்றி உறுதியான மமதையில் செயல்பட்ட இந்திய பவுலர்கள் யார்கர் பந்துகளை வீசாமல் வேண்டுமென்றே வெற்றியை கோட்டை விட்டார்கள். இந்நிலையில் பேட்டிங்கில் சொதப்பினாலும் 9 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை வசப்படுத்திய இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.

Mehidy-Hasan-1

அதிலும் இப்போட்டியில் டெத் பவுலர் யார் என்று தெரியாமலேயே குழம்பிய வகையில் கேப்டன் ரோகித் சர்மா செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “9 விக்கெட்டுகள் எடுத்ததால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. பேட்டிங் மோசமாக இருந்தும் பவுலர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் யார் நம்முடைய டெத் பவுலர்? குல்தீப் சென்னா அல்லது தீபக் சஹரா? அது போக கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை விட்டோம். அதற்காக ராகுலை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர் சமீப காலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை”

- Advertisement -

“இருப்பினும் நல்ல ஃபீல்டரான அவர் தான் டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள். நாம் அழுத்தத்தில் நிறைய தவறுகளை செய்தோம். போதாக்குறைக்கு நாம் முக்கிய நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசினோம். ஆனால் உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து – நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உயரே பறக்கிறார்கள்”

Mohammad-Kaif

“மொத்தத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தில் நாம் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம்மிடம் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி வங்கதேசத்தை வெற்றி பெற வைத்து விட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்” என்று கூறினார்.

Advertisement