டெஸ்ட் போட்டியில் தோனியின் 7 ஆம் நம்பர் ஜெர்சி யாருக்கு – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் நாளை 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Dhoni

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் உலக அளவில் துவங்கி உள்ளதால் அனைத்து டெஸ்ட் அணிகளும் தங்களது வெள்ளை நிற சீருடையில் பெயர் மற்றும் எண்களை பதிந்து விளையாடுகின்றன. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கும் வெள்ளை நிறைவு சீருடையில் பெயர் மட்டும் எண் கொண்ட சீருடை தயாராகியுள்ளது.

இந்நிலையில் தோனியின் ஏழாம் நம்பர் ஜெர்சியை டெஸ்ட் போட்டியில் அணிந்து விளையாடுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது 20 மற்றும் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் இந்திய அணி வீரர்களின் யாரேனும் விருப்பப்பட்டால் ஏழாம் நம்பர் ஜெர்ஸி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

Dhoni

எனவே தற்போது அந்த 7ஆம் நம்பர் ஜெர்சியை யார் பயன்படுத்த போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதே வேளையில் தோனியின் கிரிக்கெட் சாதனைகளுக்காகவும் அவரின் பங்களிப்புகாகவும் அந்த ஏழாம் நம்பர் எண்ணுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ யோசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -