ஜிம்பாப்வே, நெதர்லாந்தை அடிச்சு செமி ஃபைனல் வந்தா இப்படித்தான் ஆகும் – இந்தியாவை கலாய்த்து அக்தர் பேசியது என்ன

Akhtar
Advertisement

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் பைனலில் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் இங்கிலாந்து கத்துக்குட்டி அயர்லாந்திடமும் பாகிஸ்தான் மற்றொரு கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடமும் லீக் சுற்றில் தோற்றும் முக்கிய நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதால் பைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக முதல் போட்டியிலேயே விராட் கோலியின் அபார ஆட்டத்தால் கையில் வைத்திருந்த வெற்றியை நழுவ விட்ட பாகிஸ்தான் 2வது போட்டியில் ஜிம்பாப்வேவிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் அவமான தோல்வியை சந்தித்தது.

PAK vs ENG Jose Buttler Babar Azam

அதனால் கதை முடிந்ததாக கருதப்பட்ட அந்த அணி அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்றதுடன் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்து வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்று விட்டது. முன்னதாக கடந்த 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இதே போல் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக துவளாமல் கடைசி நேர அதிர்ஷ்டத்துடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

- Advertisement -

இதெல்லாம் சாதனையா:

எனவே அதே மேஜிக்கை பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் இப்போது நிகழ்த்தும் என்று அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மறுபுறம் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் பாகிஸ்தானை விட உலகத்தரமாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் லீக் சுற்றில் இந்தியா பதிவு செய்த 4 வெற்றிகளில் 2 வெற்றிகள் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய கத்துக்குட்டிகளுக்கு எதிராக வந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma

அப்படி கத்துக்குட்டிகளை அடித்து செமி பைனல் வந்த காரணத்தாலேயே அங்கு வலுவான இங்கிலாந்திடம் படுமோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவிடம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசும் பவுலர்கள் இல்லை. எதிரணியின் தொண்டையை நறுக்கும் ஸ்பின்னர்களும் இல்லை. அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு உகந்த கால சூழ்நிலைகள் அமைந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் அணி தேர்வில் குழப்பம் இருந்ததே அவர்களுடைய வீழ்ச்சிக்கு காரணமாகும்”

- Advertisement -

“அதனால் இந்தியாவின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் மெல்போர்ன் மைதானத்தில் ஃபைனலில் எங்களை எதிர்கொள்ள தகுதியற்றவர்கள். ஏனெனில் அவருடைய உண்மையான பலவீனம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அம்பலப்படுத்தப்பட்டது. மேலும் இந்த உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதியில் தகுதி பெற்றதில் என்ன சாதனை இருக்கிறது? ஏனெனில் குரூப் 2 பிரிவில் 4 நல்ல அணிகள் இருந்தன. அதில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வேவை நீங்கள் (இந்தியா) தோற்கடித்தது பெரிதல்ல. எனவே இந்தியா அவர்களுடைய தலைமையில் இருப்பவர்களையும் நிர்வாகத்தில் இருப்பவர்களையும் பார்க்க வேண்டும். அவர்களுடைய தேர்வு ஆரம்பம் முதலே குழப்பமாக இருந்து வருகிறது” என்று கூறினார்.

Shoaib Akhtar

இருப்பினும் நாங்களாவது 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு வந்தோம் ஆனால் நீங்கள் தென்னாபிரிக்காவை தோற்கடித்து நெதர்லாந்து வழங்கிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி ஃபைனலுக்கு வந்ததாக அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் எப்போதும் இந்தியாவைப் பற்றி நினைத்து கவலைப்படாமல் உங்களது அணி முதலில் ஃபைனலில் கோப்பை வெல்லுமா என்பதை பற்றி பேசுமாறும் இந்திய ரசிகர்கள் கூறுகிறார்கள். அதை விட நாங்கள் தோற்கடித்த ஜிம்பாப்வேவிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நீங்கள் சந்தித்த அவமான தோல்வியை நினைத்துக் கொண்டே ஃபைனலில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுமாறு இந்திய ரசிகர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement