மேற்கிந்திய தீவுகள் அணி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது.இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னனி வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை புறக்கணித்துள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் மற்றும் புதுமுக வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படவுள்ளனர்.அப்படி தேர்வு செய்யப்பட்ட மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் பட்டியலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வீராசாமி பெருமாள் என்கிற வீரரும் இடம் பெற்றுள்ளார்.
முன்னதாக இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த போது தீவிரவாதிகள் மைதானத்திற்கு வெளியே சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியபோது இலங்கையை சேர்ந்த முன்னனி வீரர்கள் காயமடைந்தனர். மேலும் பாகிஸ்தானிய பாதுகாப்பு வீரர்கள் 7பேர் அந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.அன்று முதல் பல்வேறு நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதை தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி தவிர்த்துவந்தது.
பின்னர் பாகிஸ்தானிய கிரிக்கெட் வாரியம் கெஞ்சி கூத்தாடி ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தானிற்கு அழைத்து விளையாடியது.அதன்பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தந்த உத்தரவை ஏற்று இலங்கை கிரிக்கெட் வாரியம் மீண்டும் தங்களது வீரர்களை அனுப்பி விளையாடியது. அதிலும் முன்னனி வீரர்கள் பலரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை காரணம் காட்டி தவிர்த்தனர்.
அதேப்போல தான் தற்போது மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிறிஸ் கெய்ல் போன்ற மூத்த வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பதை புறக்கணித்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் பட்டாளத்தை அனுப்பி வைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம்.