6 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. ஒரே ஓவரில் 36 ரன்ஸ்.. ஆப்கானிஸ்தானை புரட்டிய பூரான்.. வெ.இ 2 உலக சாதனை வெற்றி

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஜூன் 18ஆம் நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 218/5 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ப்ரிண்டன் கிங் 7 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் ஆப்கானிஸ்தான் பவுலர்களை பந்தாடினர். அதில் ஆப்கானிஸ்தான் பவுலர்களை தம்முடைய ஸ்டைலில் அடித்து நொறுக்கிய பூரான் 6 பவுண்டரி 8 சிக்ஸருடன் 98 (53) ரன்கள் குவித்து துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:
அதே போல ஜான்சன் சார்லஸ் தன்னுடைய பங்கிற்கு 43 (27) ரன்கள் எடுத்தார். அவர்களுடன் ஷாய் ஹோப் 25 (17), கேப்டன் ரோவ்மன் போவல் 26 (15) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குல்பதின் நைப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 219 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 16.2 ஓவரில் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 38, ஓமர்சாய் 23 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஒபேத் மெக்காய் 3, அகில் ஹொசைன் 2, குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஒரு உலகக் கோப்பையில் 2 முறை 100க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதே வருடம் உகாண்டா அணிக்கு எதிராகவும் வெஸ்ட் இண்டீஸ் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. வேறு எந்த அணியும் இப்படி ஒரே உலகக் கோப்பையில் 2 முறை 100+ ரன்கள் வித்தியாசத்தில் வென்றதில்லை. இது போக இப்போட்டியில் 6 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 92/1 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் படைத்துள்ளது.

இதையும் படிங்க: தோல்வி பயத்தால் சொந்த நாட்டிற்கு செல்லாமல் இங்கிலாந்து புறப்பட்ட 5 பாகிஸ்தான் வீரர்கள் – அடப்பாவமே (விவரம் இதோ)

இதற்கு முன் 2014 டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து 91/1 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமின்றி ஓமர்சாய் வீசிய 5வது ஓவயில் நிக்கோலஸ் பூரான் 26 ரன்கள் அடித்தார். அதே ஓவரில் ஓமர்சாய் 10 ஒய்ட் ரன்களை கொடுத்தார். அந்த வகையில் 36 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பையில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்தது. இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் தனியாளாக 36 ரன்கள் எடுத்து இந்தியாவை உலக சாதனை படைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement