இருக்கட்டும்..சென்னையை அங்க வச்சி கவனிச்சுக்குறோம் – தினேஷ் கார்த்திக் சவால் !

dhoni
- Advertisement -

அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை சரிசெய்துக்கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற செய்வோம் என்றார் தினேஷ் கார்த்திக்.இரண்டாடுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி கொல்கத்தா அணி கேப்டனும் சென்னை மண்ணின் மைந்தனுமான தினேஷ் கார்த்திக் அணியை எதிர்கொண்டது.
Nitish-Rana

நேற்றைய சென்னை சூப்பர்கிங்ஸ்–கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.பல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸ்ஸல் 36 பந்துகளில் 11சிக்ஸர் உட்பட 1பவுண்டரிகளுடன் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அடுத்ததாக சென்னை அணி 20ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது.
kkr

சென்னை அணியின் சார்பில் ஷேன்வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர்.சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5.5 ஓவர்களில் 75 ரன்களை கடந்திருந்தபோது 19 பந்துகளில் 3பவுண்டரிகள்,3சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தார்.

- Advertisement -

கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு நான்கு ரன்களை தேவை என்கிற பரபரப்பான சூழலில் வினய்குமார் வீசிய 5வது பந்தில் அபாரமாக சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார் ஜடேஜா.சென்னை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 203 ரன்களை எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் சொந்த மண்ணில் களமிறங்கிய சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றவுடன் தன்னுடைய இரண்டாவது வெற்றியையும் இந்த ஐபிஎல் சீசனில் பதிவுசெய்தது.இந்த போட்டியின் பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசியதாவது “இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு ஆதரவு அதிகமிருக்கும் என்பது நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

எங்கள் அணியில் ஆன்ட்ரூ ரஸ்ஸல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். 20ஓவர் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம். அடுத்த போட்டியில் சொந்த மண்ணில் நாங்கள் களமிறங்குவதால் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

Advertisement