
கலமிறங்கினார் வாட்சன் கலங்கியது டெல்லி அணி. நடந்து முடிந்த மும்பை போட்டியில் சொற்ப ரன்களை எடுத்து ரசிகர்களை ஏமாற்றிய வாட்சன் தற்போது சென்னையின் புதிய வீடான புனேவில் நடந்து வரும் போட்டியில் அமபரமாக விளையாடி வந்தார்.
இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டூப்ளிசி மற்றும் வாட்சன் கூட்டணியில் டூப்லீஸி ஆரம்பத்தில் சற்று தட்டி தட்டி ஆடினாலும் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். போட்டியின் 2 வது ஓவெரில் வெறும் 1 ரன்களை மட்டுமே எடுத்து பந்துகளை சாப்பிட்டு வந்தார் டூப்ளிசி. ஆனால் ஆரம்பம் முதலே தனது அதிரடியை காண்பித்து வந்த வாட்சன் போட்டியின் 3 வது ஓவெரிலியே சிக்ஸ்களை பறக்க விட்டு அணியின் ரன் ரேட்களை சரி செய்து கொண்டே வந்தார்.
டெல்லி அணியில் யார் பந்து வீசினாலும் அவர்களின் பந்துகளை பௌண்டறிகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்த வாட்சன் 25 பந்திகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் 33 ரன்களில் டூப்ளிஸி பெவிலியன் திரும்பிய பின்னர் அடுத்த வந்த ரைனாவும் 2 பந்துகளை 1 ரன்களை மட்டுமே எடுத்து மேக்ஸ்வெல் வீசிய பந்தை ஸ்டம்பில் அனுமதித்து கிளீன் போல்ட் ஆகி அவரும் பெவிலியன் திரும்பினர்.
ரைனாவிற்கு பிறகு களம் இறங்கிய சென்னையின் புதிய நம்பிக்கை நட்சத்திரமான ராய்டு வாட்சனின் அதிரடி ஆட்டத்திற்கு பக்கபலமாக இருந்து வந்தார். பின்னர் 13.5 ஓவரில் மிஸ்ரா வீசிய பந்தில் 78 ரன்களுக்கு ஆட்மிழந்தார் வாட்சன்.