6. 6. 6. 6.. கேமரூன் க்ரீன் ஒரே ஓவரில் அடுத்தடுத்த 4 சிக்ஸர்களை தெறிக்க விட்ட சூரியகுமார்.. ஒன்டேவிலும் அமர்க்களம்

Suryakumar Six
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில் மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கைக்வாட் 8 ரன்களில் ஜோஸ் ஹேசல்வுட் வேகத்தில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அதில் காயத்திலிருந்து குணமடைந்து தடுமாறி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அதிரடியான பேட்டிங் செய்து 11 பவுண்டரி 3 சிக்சருடன் 105 (90) ரன்கள் குவித்து சதமடித்து ஃபார்முக்கு திரும்பி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சரவெடி சூரியகுமார்:
அவருடன் 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் தம்முடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 104 (97) ரன்கள் விளாசி அவுட்டானர். அந்த நிலைமையில் இஷான் கிசான் 31 (18) ரன்கள் குவித்து அவுட்டானாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டனர்.

குறிப்பாக சுமாராக பந்து வீசிய கேமரூன் கிரீனுக்கு எதிராக கேஎல் ராகுல் மைதானத்திற்கு வெளியே பறந்து செல்லும் அளவுக்கு பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தார். ஆனால் அவரை விட 44வது ஓவரில் வலுவாக சிக்கிய கேமரூன் கிரீன் வீசிய முதல் பந்தில் தம்முடைய ஸ்டைலில் மடக்கி அடித்து அற்புதமான சிக்சரை பறக்க விட்ட சூரியகுமார் யாதவ் அடுத்த பந்திலும் கிட்டத்தட்ட விக்கெட் கீப்பர் பின்புறத்தில் அசால்டான சிக்ஸரை விளாசினார்.

- Advertisement -

அதனால் சுதாரித்த கேமரூன் கிரீன் 3வது பந்தை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்க்கு வெளியே வைத்த போதிலும் விட்டு வைக்காத சூரியகுமார் முன்னோக்கி சென்று கவர் திசையில் மிரட்டலான சிக்ஸஎ விளாசினார். அதோடு நிற்காமல் 4வது பந்தில் மிட் விக்கெட் திசையில் முன்பை விட பெரிய சிக்சரை அடித்த அவர் 5வது பந்தில் சிங்கிள் எடுத்ததால் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இறுதியில் அவருடன் அசத்திய கேஎல் ராகுல் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (38) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 6 சிக்சரை பறக்க விட்ட சூரியகுமார் 72* (37) ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அமர்களமான ஃபார்முக்கு வந்துள்ளார். மேலும் ஜடேஜா 13* (9) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 399/5 ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement