ராகுல் மீதான கோபத்தால் தமிழக வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய கேப்டன் ரோஹித் – ரசிகர்கள் கண்டனம்

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
- Advertisement -

9 மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு இது: வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியா 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் டிசம்பர் 1ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடியது. தக்கா நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய வங்கதேச அணியின் சிறப்பாக பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத இந்தியா ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் ரோஹித் சர்மா 27, சிகர் தவான் 7, விராட் கோலி 9 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் தனி ஒருவனை போல அசத்தலாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல் 5 பவுண்டரி 4 சிக்சருடன் 73 (70) ரன்கள் குவித்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை சாய்த்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேச அணியும் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

எல்லை மீறிய ரோஹித்:
குறிப்பாக சாண்டோ 0, ஹைக் 14, லிட்டன் தாஸ் 41, ஷகிப் அல் ஹசன் 29, முஸ்பிக்கர் ரஹீம் 18 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 139/5 என தடுமாறிய வங்கதேசம் தோல்வியின் பிடியில் சிக்கிய வேளையில் இந்தியாவின் வெற்றி உறுதியானது. ஆனால் கடைசி நேரத்தில் நங்கூரமாக நின்ற மெஹந்தி ஹாசன் 4 பவுண்டர் 2 சிக்சர்களும் விளாசி 38* (39) ரன்கள் குவித்ததால் 46 ஓவரில் 187/9 ரன்கள் எடுத்த வங்கதேசம் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

முன்னதாக அப்போட்டியில் ஷார்துல் தாகூர் வீசிய 43வது ஓவரின் 4வது பந்தை மெஹந்தி ஹசன் வேகமாக அடித்த நிலையில் அது தேர்ட் மேன் திசை நோக்கி கேட்ச்சாக சென்றது. அந்த இடத்தில் இருந்த தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒருவேளை அதை வேகமாக ஓடி வந்து தாவி பிடித்திருந்தால் கேட்ச் பிடித்திருக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனாலும் கூட கடினமாக இருக்கும் என்று கருதப்படும் அந்த கேட்ச்சை பிடிப்பதற்கு அவர் முயற்சிக்காத காரணத்தால் கோபமடைந்த கேப்டன் ரோகித் சர்மா பிரபல ஆங்கில கெட்ட வார்த்தையான “வாட் தி” என்ற சொல்லை பயன்படுத்தி திட்டினார்.

- Advertisement -

ஆனால் விஷயம் என்னவெனில் அந்த பந்துக்கு முந்தைய பந்தில் தான் கேஎல் ராகுல் அல்வா போல வந்த கேட்ச்சை கோட்டை விட்டார். அதனால் அந்த மொத்த கோபத்தையும் வாஷிங்டன் சுந்தர் மீது ரோகித் சர்மா காட்டியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏனெனில் அதை விட எளிதாக கைக்கு கிடைத்த கேட்ச்சை தவற விட்ட ராகுல் மீது அவர் அதற்கு முந்தைய பந்தில் அவ்வளவு கோபத்தை காட்டவில்லை. அத்துடன் இதர வீரர்கள் தவறு செய்தாலும் கோபப்படாமல் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதே கேப்டனின் அடிப்படை பண்பாகும்.

அப்படிப்பட்ட நிலையில் இளம் தமிழக வீரரிடம் கோபமடைந்த ரோகித் சர்மா இப்போது மட்டுமல்லாமல் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரஷ்தீப் சிங் கேட்ச் விட்ட போதும் இதே போல் எறிந்து விழுந்தார். இது மட்டுமல்லாமல் சமீப காலங்களில் புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட சீனியர்கள் மீதும் இது போன்ற கோபத்தை வெளிப்படுத்துவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். அதனால் முதலில் அழுத்தமான நேரங்களில் அணி வீரர்களிடம் கேப்டன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள் அப்போது தான் உங்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

Advertisement