தோனி சைக்கிளில் செய்த சேட்டை

Dhoni and Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் உலகில் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் ஒரு ஒப்பற்ற வீரராக திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றதை தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை (ஆகஸ்ட் 1) துவங்க உள்ளது.

இந்த போட்டிக்காக அணைத்து வீரர்களும் கடுமையாக பயிற்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தோனி மட்டும் ஹாயாக ஊர் சுற்றி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஒய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இன்றி ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார் தோனி.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வேடிக்கையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு மிதிவண்டியில் கூலாக அமர்ந்து கொண்டு காதில் ஹெட்செட்டுடன் இருக்கும் தோனி, ஒரு கட்டயை வாயில் ஏந்தியவாறு அந்த மிதி வண்டியை ஓட்டி செல்கிறார். இந்த வேடிக்கையான சாகசத்தை அங்கிருந்தவர்கள் அனைவரும் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement