புயல் வேகத்தில் ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட இஷாந்த் சர்மா..! பயத்தில் வீரர்கள்..! இந்திய அணிக்கு திரும்புவாரா ..?

sharma
- Advertisement -

இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா சில காலமாக தனது பார்மில் கொஞ்சம் ஆட்டம் கண்டதால் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வருகிறார். இவரது மோசமான ஆட்டத்தால் இவரை இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் போது, 75 லட்சம் என்ற நிர்ணையிக்கபட்ட விலையை கொடுத்தும் வாங்க ஆளில்லாமல் போனது.

ஆனால் தற்போது மீண்டும் தலைப்பு செய்தியாக வந்துள்ளார் இஷாந்த் ஷர்மா, தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் சூஸக்ஸ் அணியில் விளையாடி வரும் இஷாந்த் ஷர்மா அசத்தலாக விளையாடி வருகிறார்.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி கிளமோர்கன் அணியுடன், சூஸக்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் இஷாந்த், சிறப்பாக பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த தொடரில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

கடந்த 1 ஆம் தேதி நடந்த போட்டியில் சூஸக்ஸ் அணி, கிளமோர்கன் அணியுடன் தோல்வியுற்ற போதிலும், இந்த போட்டியில் கிளமோர்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிகோலஸ் செல்மனை 15 ரன்களில் தனது மேஜிக் பந்து மூலம் ஆட்டமிழக்க வைத்துள்ளார் இஷாந்த். இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement