- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியை மாற்றாதீங்க.. மொத்த வரிசையும் பாழாகிடும்.. இந்திய அணியை எச்சரித்த வாசிம் ஜாபர்

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்த இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்கியது இதுவரை இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. கடந்த உலகக் கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்த அவர் 2 தொடர்நாயகன் விருதுகளையும் என்று அசத்தினர். இருப்பினும் இம்முறை 2024 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றதால் அவர் துவக்க வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

மொத்தமும் பாழாகிடும்:
அந்த வாய்ப்பில் 1, 4, 0 மட்டுமே எடுத்த அவர் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டானார். எனவே மீண்டும் அவரை 3வது இடத்தில் களமிறக்கி ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக காணப்படுகிறது. இந்நிலையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை மாற்றினால் மொத்த பேட்டிங் வரிசையும் பாழாகிவிடும் என்று வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார்.

எனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் தற்போதைய பேட்டிங் வரிசை சிறப்பாக விளையாடும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போது நீங்கள் இதே வரிசையை தொடர வேண்டும். ஏனெனில் நீங்கள் ரோஹித் – விராட் கோலி ஆகியோரை பிரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அங்கே நீங்கள் ஜெய்ஸ்வாலை விளையாட வைப்பது பற்றி சிந்திக்கலாம்”

- Advertisement -

“ஆனால் ஏற்கனவே ரிசப் பண்ட் 3வது இடத்தில் நன்றாக விளையாடியுள்ளார். ஒருவேளை நீங்கள் ஓப்பனிங் ஜோடியை மாற்றினால் அவர் 4வது இடம் போன்ற கீழ் வரிசையில் விளையாட வேண்டும். அப்படி செய்தால் சூரியகுமார் யாதவ் எங்கே விளையாடுவார்? எனவே விராட் கோலியின் இடத்தை மாற்றுவது மொத்த பேட்டிங் வரிசையிலும் சீர்குலவை ஏற்படுத்தும். இந்தியா இதே வரிசையில் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: என்னால அவன் கிட்ட பேச கூடமுடியல.. தந்தையர் தினம் அன்று வருத்தமான பதிவை வெளியிட்ட – ஷிகர் தவான்

“ரிஷப் 3வது இடத்தில் நன்றாக செயல்பட்டுள்ளார். சூரியகுமார் 4வது இடது காட்டிலும் கீழ் வரிசையில் விளையாடுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நாம் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும். எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 74 ரன்கள் அடித்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பவர்பிளே ஓவர்களில் விராட் – ரோஹித் அதிரடியாக விளையாடுவதை பார்ப்பீர்கள்” என்று கூறினார்.

- Advertisement -