- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னா மனுஷன்யா.. இந்தியாவுக்காக அவர் மட்டும் தான் டி20 உ.கோ ஜெயிக்க தகுதியானவர்.. ஹபீஸ் வாழ்த்து

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 1 முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளை தோற்கடித்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது செமி ஃபைனலில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த டி20 உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விடை பெற உள்ளார். அதே போல 35 வயதை தாண்டி விட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இதுவே கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஹபீஸ் பாராட்டு:
எனவே அவர்கள் சாம்பியன் பட்டத்துடன் விடை பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை முதலே ரோஹித் சர்மா தனது சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி விளையாடுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். எனவே அவர் மட்டுமே இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர் என்று தெரிவிக்கும் ஹபீஸ் இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ளது பின்வருமாறு.

“ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளையாடியது இன்னிங்ஸ் அல்ல. 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கான பழிக்கு பழி. அந்தத் தருணத்திற்காக காத்திருந்த அவர் அதை அப்போட்டியில் நிரூபித்துள்ளார். ரோஹித் நன்றாக விளையாடும் போது யாரும் அவர் முன்னே நிற்க முடியாது. கடந்த 2023 உலகக் கோப்பையிலும் அவர் தான் இந்தியாவின் முதன்மை வீரராக செயல்பட்டார். எது நடந்தாலும் அவர் சுயநலமின்றி விளையாடுகிறார்”

- Advertisement -

“அவர் எப்போதும் தன்னுடைய சொந்த சாதனைகளை நினைக்காமல் பந்துக்கு தகுந்தார் போல் அடிக்கிறார். கடந்தப் போட்டியில் எனக்கு 50 – 100 ரன்கள் முக்கியமல்ல என்று அவர் சொன்னார். ஏனெனில் அவர் சதங்கள் அடிப்பதை விரும்பவில்லை. அவர் ஐசிசி கோப்பையை வென்று அனைவராலும் நினைக்கப்படும் சாம்பியன் வீரராக உருவாக விரும்புகிறார்”

இதையும் படிங்க: ஐபிஎல் கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டாரு.. எல்லாரும் வாயில் சொல்வதை செயல்லயே காமிச்சுட்டாரு.. கில்கிறிஸ்ட் பாராட்டு

“உங்களுடைய லட்சியம் பெரிதாக இருந்தால் உங்களுடைய செயல்பாடும் பெரியதாக இருக்கும். எனவே இந்த உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வெல்வதற்கு ரோஹித் சர்மா மட்டுமே தகுதியான ஒரே மனிதர்” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி சுயநலமாக விளையாடுவதாக விமர்சித்திருந்த அவர் சுயநலமின்றி விளையாடும் ரோகித் சர்மாவை என்னா மனுஷன்யா என்ற வகையில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -