ரோஹித் இதற்காக கேப்டன் ஆகவேண்டும் – முன்னாள் வீரரின் விமர்சையான கருத்து

Rohith-1
- Advertisement -

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் மீதும், கேப்டன் கோலியின் மீதும் விமர்சனங்கள் மெல்ல மெல்ல எழதுவங்கியுள்ளன.

Rohith

- Advertisement -

இந்நிலையில் ரோகித் கேப்டனாக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ட்வீட் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ஒருநாள் அணியில் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா ? 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

இப்படி அவர் கூறியதற்கு காரணம் இருக்கிறது. அந்த காரணம் யாதெனில் : 2023-ம் ஆண்டு உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அவ்வாறு இந்தியாவில் நடைபெறும் போது இறுதிப் போட்டி மும்பை அல்லது கொல்கத்தா மைதானங்களில் நடைபெறும்.

Rohith

தோனிக்கு அடுத்து ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை கேப்டனாக வென்றவர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு உண்டு. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் இந்த ரோஹித்தின் கேப்டன்சி கருத்தில் கொண்டு ஜாபர் இந்த கருத்தினை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement