அவங்க 2 பேரும் டீம் குள்ள வந்துட்டா ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் காலியாயிடும் – வாசிம் ஜாபர் எச்சரிக்கை

Wasim-Jaffer-and-Shreyas-Iyer
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக தற்போது 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் தனது நிலையான விளையாட்டை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருவதால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதேவேளையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் வேளைகளில் 3-வது வீரராக களமிறங்கும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடர் என அனைத்திலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் மூன்றாம் இடத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

Shreyas-iyer

- Advertisement -

அதோடு இந்த 2022ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் அவர் திகழ்கிறார். இதன் காரணமாக நிச்சயம் அவர் டி20 உலகக்கோப்பை அணியில் முக்கிய வீரராக இடம் பெறுவார் என்று அனைவரும் பேசி வருகின்றார். ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் ஸ்ரேயாஸ் அய்யர் டி20 உலகக்கோப்பை அணிக்கு தேர்வாவது கடினம் என்றும் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் அணிக்குள் வந்தால் அவரது இடம் பறிபோகும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

என்னை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் தற்போது நிலையான ஒரு இடமாக இல்லை. ஏனெனில் காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாடும் வீரராக மாறுவார். அதேபோன்று விராட் கோலியும் வரும் பட்சத்தில் அவர் 3-வது இடத்தில் களம் இறங்குவார். இப்படி கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3 மற்றும் 4 வது இடத்தில் விளையாடும்போது ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்டும், ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும் விளையாட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

Sky-1

அதே வேளையில் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோரே விளையாடுவார்கள் என்பதனால் டி20 கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் காலியாகிவிடும். அதனால் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை தனது இடத்தை கிட்டத்தட்ட இழக்கும் அபாயத்தில் அவர் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் துவக்க வீரர்களாக அணியில் இருக்கும் பட்சத்தில் மூன்றாவது துவக்க வீரருக்கான் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இருக்கின்றனர். இருந்தாலும் இவர்கள் இருவரும் நிச்சயம் டி20 உலகக்கோப்பை அணியில் பேக்கப் வீரர்களாக இருப்பார்கள். அதேவேளையில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக நீடிப்பார் என்று கூறியுள்ளார். இருந்தாலும் ரிஷப் பண்ட் கொஞ்சம் சுதாரித்து விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு தேர்வானது குறித்து உணர்ச்சிகரமான கருத்தினை பகிர்ந்த – ராகுல் திரிப்பாதி

ஏனெனில் 20 கிரிக்கெட்டை பொறுத்த வரை அவரை போன்ற அதிரடியான வீரர்கள் போட்டியை மாற்றும் திறமை கொண்டவர்கள் என்றாலும் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து அணியையும் சிக்கலுக்கு தள்ளக்கூடாது. எனவே சூழ்நிலையை புரிந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ரிஷப் பண்ட் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வாசிம் ஜாபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement