அவசரப்பட்டு அவரை ஆட வைத்தால் இந்திய அணி காலியாயிடும்.. முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து

Jaffer
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணியானது முதல் மூன்று போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பைகளை தவறவிட்டு வரும் இந்திய அணி இம்முறை டி20 உலககோப்பையை வெற்றி பெற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதன்படி இந்திய அணி இதுவரை விளையாடி உள்ள மூன்று போட்டியிலுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங் துறையில் நமது அணியின் வீரர்களிடமிருந்து பெரிய அளவு சிறப்பான ஆட்டம் வெளிவரவில்லை.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே ஒரு அரைசதம் அடித்துள்ளனர். அவர்கள் இருவரை தவிர்த்து ரிஷப் பண்ட் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். மற்றபடி இந்திய அணியின் பேட்டிங் சற்று ஏமாற்றமாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை எந்த வகையிலும் மாற்றக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி தற்போது துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். எனவே ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் பிரிக்கக் கூடாது. அப்படி பிரித்து பேட்டிங் ஆர்டரில் மாற்றத்தை கொண்டு வந்தால் அணியின் ஒட்டுமொத்த ஆர்டரும் மாறுவதற்கான சூழல் ஏற்படும். எனவே அந்த முடிவுகளை ரோகித் சர்மா எடுக்க வேண்டாம்.

இதையும் படிங்க : ராகுல் – ரோஹித் இப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுப்பாருன்னு எதிர்பாக்கல.. சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டு

அதை தவிர்த்து தங்களது ஆட்டத்தில் எவ்வாறு முன்னேற்றத்தை காணலாம் என்று அணி மீட்டிங்கின்பது பேசலாமே தவிர மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. தற்போது உள்ள இந்திய அணி நிச்சயம் எந்த ஒரு அணியையும் வீழ்த்தக்கூடிய அணியாகவே இருக்கிறது. எனவே பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement