ராகுல் டிராவிட் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக ஆகக்கூடாது. அதுக்கு காரணம் இருக்கு – வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ராகுல் டிராவிட் தற்போது இலங்கை சென்றிருக்கும் புதிய இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியுடன் பயிற்சியாளராக சென்று இருப்பதன் காரணமாக விரைவில் அவர் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக மாற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

dravid

- Advertisement -

மேலும் ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல வில்லை என்றும் நிச்சயம் ராகுல் டிராவிட் முழுநேர பயிற்சியாளராக பொறுப்பேற்றால் அந்த சாதனையை இந்திய அணி செய்து காட்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் டிராவிட் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக மாறக் கூடாது என்று தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறக்கூடாது ஏனெனில் தற்போது உள்ள 19 வயதுக்குட்பட்டோர் அணியையும், இந்திய ஏ அணியையும் கடந்த பல ஆண்டுகளாகவே சரியாக கட்டமைத்து இந்திய அணிக்கு பல முன்னணி வீரர்களை ராகுல் டிராவிட் வழங்கிவருகிறார். அதுமட்டுமின்றி தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

தொடர்ந்து டிராவிட் இதேபோன்று திறமையான இளம் வீரர்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக அவர் இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக மாறக் கூடாது என தான் விரும்புவதாக கூறியுள்ளார். தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியை மனதளவில் தைரியப்படுத்தவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சென்றிருக்கிறார். நிச்சயம் இது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தரும்.

Dravid

ஆனால் அவரை முழுநேர பயிற்சியாளராக மாற்ற அழுத்தம் தரக்கூடாது என்னை பொறுத்தவரை இளம் வீரர்களை உருவாக்குவதுதான் அவரது சிறப்பான பணி அதனை அவர் சரியாக செய்து வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் டிராவிடை முழுநேர பயிற்சியாளராக மாற்றக்கூடாது என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement