38 வயதான இந்திய அணியின் சீனியர் வீரரான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக மூன்றுவகை உலக கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய வீரராக திகழ்கிறார்.
இந்நிலையில் தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட ஆசைப்பட்டுகிறார் என்ற தகவலும் வெளியாகியது.
ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு போட்டியிலும் இதுவரை இந்திய அணியில் தோனி சேர்க்கப்படவில்லை. மேலும் அடுத்ததாக அவர் ஐபிஎல்லில் விளையாடி அதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரும் தள்ளிப் போய் உள்ளதால் அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது சிக்கலாகி உள்ளது.
Favourite memory with Ms Dhoni ? #AskWasim pic.twitter.com/lxqdmJJ8kX
— ⚡️ (@being_Abhi18) March 28, 2020
இதனால் தோனி விரைவில் ஓய்வினை அறிவிப்பார் என்ற தகவலும் அவரது நண்பர்கள் மூலம் வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த ஆண்டு அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், சேவாக் போன்றவர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆனால் அண்மையில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த விதர்பா அணியின் கேப்டன் ஜாபர் தோனியின் ஓய்வு குறித்து ஆதரவான கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகிறார். அதன்படி தற்போது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வரும் ஜாபர் தோனி உடன் உங்களை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ரசிகர் கேட்க அதற்கு பதிலளித்த வாசிம் ஜாபர் :
In his 1st or 2nd year in Indian team, I remember he said, he wants to make 30lakhs from playing cricket so he can live peacefully rest of his life in Ranchi 😅😃
— Wasim Jaffer (@WasimJaffer14) March 28, 2020
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது தோனி இந்திய அணியில் இடம் பிடித்த முதல் அல்லது இரண்டு ஆண்டுகளில் தனக்கு கிரிக்கெட் மூலம் 30 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தால் போதும் நான் என்னுடைய நிம்மதியான வாழ்க்கையை ராஞ்சியிலேயே கழிப்பேன் என்று என்னிடம் கூறினார் என்று வாசிம் ஜாபர் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.