யார் சொல்றதையும் கேட்கவேணாம். இதை மட்டும் செய்தால் போதும் தோனி ஓகே – வாசிம் ஜாபர் நம்பிக்கை

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரும் இந்த மார்ச் 19ம் தேதியில் இருந்து அடுத்த ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து இருக்குமாயின் இந்த தொடர் முழுவதுமாக ரத்து செய்யும் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்னவாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

தோனி உலக கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் நீண்டகாலமாக விளையாடாமல் இருந்து வருகிறார். கடந்த 6-7 மாதங்களாக எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். அதனால் அவரது இடம் இந்திய அணியில் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

Dhoni

இந்நிலையில் இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் அவரது திறனை நிரூபித்தால் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்று ரவிசாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடர் நடைபெறாமல் போவதற்கும் வாய்ப்பிருப்பதால் தோனியின் நிலைமை மோசமாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியை அணியில் தோனியை சேர்த்தால் அவரை எந்த இடத்தில் இறக்குவீர்கள் என்று வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் டி20 போட்டிகளில் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து பேசிய வாசன் ஜாஃபர் கூறுகையில் : நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் அவர் வேறு எந்த வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

MSdhoni

ஸ்டம்பிற்க்குப் பின்னால் தோனி நிற்பது அணிக்கு பெரிய பலம் மேலும் அவர் கடைசி ஓவர்களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் அணியில் இருந்தால் அதன்மூலம் ராகுலின் சுமை குறையும், அதே சமயம் தேவைப்பட்டால் பண்ட்டை பேட்ஸ்மேனாக சேர்த்துக் கொள்ளலாம் என்று வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement