ஹார்டிக் பாண்டியா இனி வேணாம். இனி இவரையே ஆல்ரவுண்டராக விளையாட வையுங்க – வாசிம்ஜாபர் கருத்து

Jaffer
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடந்தது.

Rohith

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184/5 ரன்களை விளாசியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் விளாசினார். இதையடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் முதல் 2 போட்டிகளைப் போலவே மீண்டும் பேட்டிங்கில் தடுமாறத் தொடங்கியது.

- Advertisement -

கலக்கும் வெங்கடேஷ் ஐயர்:
அந்த அணியில் மிடில் ஆர்டரில் நிக்கோலஸ் பூரன் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 61 ரன்கள் எடுத்த போதிலும் இதர வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன்கள் குவிக்க தடுமாறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 167/9 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் 65 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டி சென்றார்.

venky 1

அவரை போலவே இந்த போட்டியில் இந்தியா தடுமாறியபோது கடைசி நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் வெறும் 19 பந்துகளில் 35* ரன்களை அடித்து இந்தியாவிற்கு மிகச்சிறப்பான பினிஷிங் கொடுத்தார். அத்துடன் 2வது இன்னிங்சில் பந்துவீசி கொண்டிருந்த தீபக் சஹர் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய போது அவரின் எஞ்சிய 2.1 ஓவர்களையும் வீசிய அவர் பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒரு ஆல்ரவுண்டராக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு மிக மிக முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

காத்திருந்தது போதும்:
இந்த போட்டி மட்டுமல்லாது இந்த தொடரின் முதல் போட்டியில் 24* (13) ரன்கள் 2வது போட்டியில் 33 (18) ரன்கள் என கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் சூப்பராக பினிஷிங் செய்தார். இப்படி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஜொலிக்க துவங்கியுள்ள அவர் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக உருவாவதற்கு நிறைய வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்நிலையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயருக்கு அதிகமாக வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Deepak

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா பந்து வீசுவரா அல்லது முழுமையாக உடல் தகுதியை பெற்றுள்ளாரா என்று தெரியாத இந்த நேரத்தில் அவர் (வெங்கடேஷ் ஐயர்) முன்னிலையில் உள்ளதாக நான் கருதுகிறேன். ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டால் நிலைமை மாறலாம். இருப்பினும் தற்போதைய நிலைமையில் ஹர்திக் பாண்டியாவுக்கு முன்பு வெங்கடேஷ் ஐயர் உள்ளார்” என கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த வருடம் காயத்தால் அவதிப்பட்டு வந்த பாண்டியா அதிலிருந்து குணமடைந்த போதிலும் பந்து வீசாமல் இருந்ததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு டி20 உலக கோப்பை 2021 தொடரில் தோல்வியை பரிசளித்தது. அந்த வேளையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் விளையாடி முழு உடல் தகுதியை பெற்றுவிட்டு இந்திய அணியில் விளையாடுமாறு சௌரவ் கங்குலி உட்பட பல பிசிசிஐ நிர்வாகிகள் வெளிப்படையாகவே அவருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அதை மதிக்காத அவர் ரஞ்சிக் கோப்பையை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 கோடிகளுக்கு கேப்டனாக விளையாடுவதற்கு தேவையான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

venky

டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு:
இதனால் கடுப்பாகியுள்ள இந்திய அணி நிர்வாகம் இனி பந்து வீசினால் மட்டுமே பாண்டியாவுக்கு இந்திய அணியில் இடம் என வெளிப்படையாக கூறி விட்டது. ஆனால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா இவ்வாறு செய்து வருவதால் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே அவருக்கு பதில் டி20 உலக கோப்பையில் விளையாட வெங்கடேஷ் ஐயருக்கு இப்போதே வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும் என வாசம் ஜாபர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “6வது இடத்தில் அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்வது ஆச்சரியமளிக்கிறது. அவர் இதற்கு முன் ஓப்பனிங் இடத்தில் விளையாடி பார்த்துள்ளேன். ஆனால் 6வது இடத்தில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது அவர் உடனடியாக அதற்கு தன்னை உட்படுத்திக்கொண்டு அதுவும் பினிஷெராக மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

இதையும் படிங்க : 10.75 கோடி கொடுத்து வாங்குனது தப்பே இல்ல. இந்திய அணிக்கு எதிராக சாதனை படைத்த பூரான் – விவரம் இதோ

அத்துடன் சிறப்பாக பந்துவீசும் அவர் முக்கிய விக்கெட்களை எடுத்து வருகிறார். எனவே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடுவதற்கான தகுதியை அவர் நெருங்கியுள்ளார்” என கூறியுள்ளார்.

Advertisement