இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இரட்டைசதம் அடிக்கும் வாய்ப்பு இவருக்கு இருக்கு – வாசிம் ஜாபர் கணிப்பு

Jaffer-1

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

IND-2

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

அதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா குறித்து பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அதிலும் அவர் வெளிநாட்டு மண்ணிலும் ரோகித் சர்மா இரட்டை சதத்தை அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆட்டம் துவங்கிய 30 முதல் 45 நிமிடங்கள் வரை அவருக்கு சற்று கடினமாக இருக்கும்.

Rohith

ரோகித் சர்மா அதனை மட்டும் சமாளித்து விட்டால் அவரை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். அவரிடமுள்ள திறமைக்கு நிச்சயம் வெளிநாட்டு மண்ணிலும் அவர் டபுள் செஞ்சுரி அடிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அவரது ஆட்டம் முன்பை விட சிறப்பாக இருக்கிறது. சூழ்நிலையை புரிந்து சிறப்பாக ஆடுகிறார்.

- Advertisement -

Rohith

இப்போது உள்ள ரோகித் சர்மா நாம் முன்பு பார்த்தவர் கிடையாது. மேலும் எப்போது ஆக்ரோஷம் வெளிப்படுத்த வேண்டும் எப்போது நிதானமாக ஆட வேண்டும் என்று அவர் புரிந்து வைத்துள்ளார் என்று ரோகித் சர்மா குறித்து ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதமடித்து உலக சாதனையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.