இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர்தான். இன்னும் கொஞ்சம் ஒழுக்கம் வேணும் – வாசிம் ஜாபர் பேட்டி

jaffer6
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் மூலம் இந்திய அணிக்கு நுழைந்தவர் பிரித்திவி ஷா. தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார். மேலும் இனிவரும் நாட்களில் அடுத்த துவக்கவீரராக தயாராகி வருகிறார். அதிரடியாக ஆடுவதில் வல்லவர். இந்த இளம் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் தொடர்ச்சியாக ஒப்பிடப்பட்டு கொண்டிருந்தார்.

சமீபத்தில் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்தினை உட்கொண்டு அதன் காரணமாக ஊக்கமருந்து பிரச்சனைகள் சிக்கி சில மாதங்கள் தடையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரிதிஷ் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விரேந்தர் சேவாக் போல் செயல்படுவார் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்.

- Advertisement -

அவர் கூறுகையில்..

என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் வீரேந்திர ஷேவாக்கை போன்று பிரித்திவி ஷா விளையாடுவார். அவர் ஒரு சிறப்பான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே போன்று அவர் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தால் விரேந்தர் சேவாக்கை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பு இருக்கிறது.

Prithvi

இன்னும் அவர் ஆட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் போது ஷார்ட் பந்தில் ஒரே மாதிரியாக இரண்டு முறை ஆட்டமிழந்தார். மேலும் ஆடுகளத்திற்கு வெளியே அவர் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் சர்வதேச அளவில் அவர் ஒரு வெற்றிகரமான வீரராக வலம் வர அவருக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.

Advertisement