ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சினை விட இவரே சிறந்தவர் – வாசிம் ஜாபர் கணிப்பு

- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் துவக்க வீரர் வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். தொடக்க காலத்தில் இந்திய அணிக்காக ஓரளவு சிறப்பாக விளையாடிய ஜாபர் அதன்பிறகு தனது திறனை வெளிப்படுத்த காரணத்தினால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

Jaffer

- Advertisement -

ஆனாலும் அதன் பின்னர் தொடர்ந்து ரஞ்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜாபருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையுடன் விடை பெற்ற இவர் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்நிலையில் தற்போது இவர் சமூக அளவில் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் ஒயிட் பாலில் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி 248 ஒருநாள் போட்டிகளில் 13000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவரது சராசரி 60 ரன்களை தொட்டுள்ளது. இதில் 43 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்களை அடித்துள்ளார். இதில் 49 சதங்கள் அடங்கும் இவரின் சராசரி 44 என்றும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சவுரவ் கங்குலி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு அணியை சிறப்பாக கட்டமைத்தார் என்றும் வீரர்கள் அவரது கேப்டன்ஷிப் அதற்கு ஆதரவாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கேப்டனாக இருக்கும் போது இளம் வீரர்களான சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற பல வீரர்களை உருவாக்கினார்கள்.

- Advertisement -

நீங்கள் ஒன்றை இழக்கும்போது அதில் பல மாற்றங்கள் உருவாகும். அணியில் ஏராளமான அதிரடி நீக்கம் மற்றும் மாற்றம் ஆகியவை நடைபெற்றது. நான் சிறப்பாக விளையாடவில்லை அது மற்றவருக்கு வழிவகுத்தது. நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சிறந்த வீரராக மாறினேன். ஆனால் அதன்பின் வருடத்துக்கு வருடம் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தேன்.

Kohli-1

ஆனால் ஒருபோதும் இந்திய அணியில் மீண்டும் என்னால் இடம்பிடிக்க முடியவில்லை. முப்பது வயதை எட்டும் போது சற்று ஏமாற்றம் அடைந்தேன். அதிக அளவில் முதிர்ச்சி அடைந்து என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டேன் இந்திய அணிக்காக மீண்டும் அழைக்கப்படாதது வருத்தமே என்று ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement