ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்தியாவின் கேப்டன்.. வேணும்னா கில் இதை செய்யட்டும்.. வாசிம் ஜாஃபர்

Wasim Jaffer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

அவர்களுடைய ஓய்வுக்கு பின் உலகின் நம்பர் ஒன் பவுலராக வலம் வரும் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் ரோஹித் இல்லாத போது அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா:

அப்படிப்பட்ட அவர் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அவ்வப்போது காயத்தை சந்திப்பவராக இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்தியாவின் அடுத்த ஆட்டோமேட்டிக் கேப்டன் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

ஒருவேளை பும்ரா விரும்பவில்லையெனில் வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற படி ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாகவும் அவரது கீழ் கில் துணைக் கேப்டனாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். வேண்டுமானால் பும்ரா ஓய்வெடுக்க விரும்பினால் ஓரிரு போட்டிகளில் சுப்மன் கில் தற்காலிகமாக இந்தியாவை தலைமைத் தாங்கலாம் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜாஃபர் கருத்து:

இது பற்றி தன்னுடைய ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் பொறுப்பு வேண்டாம் என்று ஜஸ்ப்ரித் பும்ரா நினைக்காத வரை அவர் தான் இந்தியாவின் அடுத்த ஆட்டோமேட்டிக் சாய்ஸ் என்று நினைக்கிறேன். அவர் தான் நம்முடைய கேப்டனாக செயல்பட வேண்டும். கில் துணைக் கேப்டனாக செயல்படலாம். ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது கில் கேப்டனாக களமிறங்கலாம்”

இதையும் படிங்க: இந்தமுறை நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு அதை விட மாட்டோம்.. ஆஸியை எச்சரித்த – தெம்பா பவுமா

“இவ்வாறு செய்வது சுப்மன் கில் எந்த அழுத்தமும் இல்லாமல் முழு நேர கேப்டனாக வளர்வதற்கு உதவும்” என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement