3 – 1ன்னு இந்தியா தோற்பாங்க.. கைகொடுக்குறீங்களான்னு காலம் சொல்லும்.. மைக்கேல் வாகனுக்கு ஜாபர் பதிலடி

Wasim Jaffer
- Advertisement -

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா போராடி டிரா செய்தது. அந்தப் போட்டியின் கடைசி நாளில் போட்டியை முன்னதாகவே முடித்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சொன்னது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 0/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

அப்போது நங்கூரமாக விளையாடிய கேப்டன் கில் சதத்தை அடித்து 103, ராகுல் 90 ரன்கள் குவித்து கை கொடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஜடேஜா, சுந்தர் ஆகியோர் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினார்கள். அப்போது இந்தியாவை இனிமேல் வீழ்த்த முடியாது என்று கருதிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று கை கொடுக்க வந்தார்.

- Advertisement -

மைக்கேல் வாகன் கணிப்பு:

குறிப்பாக சுந்தர் மற்றும் ஜடேஜாவின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் அவர் கை கொடுக்க வந்ததை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா, சுந்தர் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதன் காரணமாக 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தாலும் கடைசி போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலைக்கு இந்தியா வந்துள்ளது.

முன்னதாக இத்தொடரில் இளம் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கணித்திருந்தார். அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றியை இந்தியா தடுத்தது என்றே சொல்லலாம். அதன் காரணமாக “இந்தப் போட்டியை பார்த்து நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என மைக்கேல் வாகனை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் ட்விட்டரில் நலம் விசாரித்தார்.

- Advertisement -

ஜாபர் பதிலடி:

அதற்கு “மாலை வணக்கம் வாசிம். 5வது போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் சந்திப்போம். இப்போதும் 3 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெறுவது நன்றாகத் தெரிகிறது” என்று மைக்கேல் வாகன் பதில் கொடுத்தார். அதற்கு “3 – 1 என்ற கணக்கில் வெல்கிறீர்களா அல்லது ஸ்டோக்ஸ் போல ஓவல் போட்டியின் முடிவில் கைகொடுக்கத் தயாராக இருக்கிறீர்களா என்பதை காலம் சொல்லும் மைக்கேல்” என்று அவருக்கு ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவை சொல்ல நீங்க யார்? முடியலன்னா ஃப்ளின்டாபை கூட்டிட்டு வாங்க.. ஸ்டோக்ஸ், கிராவ்லியை சாடிய அஸ்வின்

அதாவது கடைசிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும். அப்போது தொடர் டிராவில் முடிந்ததற்காக ஸ்டோக்ஸ் போல நீங்களும் கை கொடுக்க வருவீர்கள் என்று அவருக்கு ஜாபர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்குகிறது.

Advertisement