41 வயதிலும் இப்படி ஒரு சாதனையா ? பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்று வரும் வாசிம் ஜாபர் – விவரம் இதோ

jaffer6
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான வசீம் ஜாபர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடியுள்ளார். தேசிய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இன்று வரை அவர் ரஞ்சிக் கோப்பை காக விளையாடி வருகிறார். 41 வயதிலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்களில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் ஜாபர் தற்போது ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் மிகச் சிறப்பான ஒரு சாதனையை செய்துள்ளார்.

Jaffer 1

அதன்படி 12,000 ரன்களை இதுவரை அவர் ரஞ்சி கோப்பையில் போட்டிகளில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். மும்பையைச் சேர்ந்த ஜாபர் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையாக 150 ஆட்டங்களுக்கு மேல் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் தேவேந்திர பண்டேலா 145 முறையும், மஜூம்தார் 136 முறையும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளனர். இவை அனைத்தையும் ஜாபர் முறியடித்துள்ளார் மேலும் தற்போது கேரளாவிற்கும் விதர்பாவுக்கும் எதிரான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஜாஃபர் 12,000 ரன்களை குவித்துள்ளார்.

Jaffer

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் வாசிம் ஜாபர் களமிறங்கியுள்ளார். இதில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாபர் 1,944 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 5 சதங்களும், 11 அரை சதங்களும் அடங்கும். இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமும், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதமும் வாசிம் ஜாபர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.8

Advertisement