தற்போது உள்ள வீரர்களில் இவரே சிறந்த கிரிக்கெட்டிங் மூளை கொண்டவர் – வாசிம் ஜாபர் கணிப்பு

jaffer6
- Advertisement -

கொரோனா பாதிப்பின் காரணமாக தற்போது உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டியும் நடப்பது சந்தேகம் என்று தோன்றுகிறது. இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடரும் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Jaffer

- Advertisement -

மேலும் ஏப்ரல் 15ம் தேதியும் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இந்தியாவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என்ற காரணத்தினால் ஐபிஎல் ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் தற்போது மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள், நட்சத்திரங்கள் ,தொழிலதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தற்போது தங்களது வீட்டில் முடங்கி நேரத்தை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்க பட்ட இந்த நாட்களை ரசிகர்களுக்காக செலவிட்டு வரும் கிரிக்கெட் பிரபலங்கள் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ரஞ்சி நாயகன் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

- Advertisement -

அதன்படி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வரும் வாசிம் ஜாபர் தற்போதைய கிரிக்கெட் கிரிக்கெட் மூளை அதிகம் கொண்ட வீரர் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதன்படி ரசிகர் ஒருவர் அவரிடம் இப்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து அணிகளையும் சேர்த்து கிரிக்கெட்டிங் மூளை அதிகம் உள்ள ஒரு வீரர் யார் என்று கூறுங்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்ததாவது :

அந்த கேள்விக்கு பதிலளித்த அவர் : ரோகித் சர்மா என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா தற்போதைய கிரிக்கெட்டில் அதிக கிரிக்கெட்டிங் மூளை கொண்டவர் என்று பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement