இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரே துவக்க வீரராக விளையாட வேண்டும் – வாசிம் ஜாபர் ஓபன்டாக்

Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி துவங்க இருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது காயம் காரணமாக கில் இந்த இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது அறிமுகமான சுப்மன் கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வாய்ப்பை பெற்றார்.

ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத கில் தற்போது காயம் காரணமாக வெளியேற உள்ளதால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் துவக்க வீரராக யாரை இறக்குவது என்ற என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் மாயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகிய இருவர் துவக்க வீரருக்கான இடத்தில் இருக்கையில் தற்போது இந்த இங்கிலாந்து தொடரில் யார் துவக்க வீரராக விளையாட வேண்டுமென்ற என்ற கருத்தினை வாசிம் ஜாபர் அளித்துள்ளார்.

agarwal 3

இதுகுறித்து அவர் கூறுகையில் : காயமடைந்த சுப்மன் கில்க்கு பதிலாக அகர்வால் துவக்க வீரராக விளையாடுவது சரியாக இருக்கும். மேலும் ராகுல் அல்லது விகாரி ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடினால் இந்திய அணிக்கு பலம் அதிகரிக்கும்.

Agarwal

சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் தான் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். மிக இளம் வயதிலேயே அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என வாசிம் ஜாபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement