- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் விராட், ரோஹித் இடத்தை நிரப்ப அவங்க தான் சரியானவங்க – தமிழக வீரர் உட்பட 3 பேரை ஆதரித்த வாசிம் ஜாஃபர்

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா இருதரப்பு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தரவரிசை நம்பர் ஒன் இடத்தை பிடித்தாலும் கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் முக்கிய தருணங்களில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. அந்த தோல்விகளுக்கு முழுமையாக நம்பியிருக்கும் நட்சத்திர சீனியர் வீரர்கள் அழுத்தமான போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டு இந்தியாவை கை விடுவது முதன்மை காரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி போன்ற சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது.

அதே போல 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஜாம்பவான்கள் என்று கொண்டாடப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமானது. அதனால் அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தற்சமயத்தில் நிறைய இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் ஏற்கனவே 2024 டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது.

- Advertisement -

மாற்று வீரர்கள்:
இந்நிலையில் யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் வருங்காலங்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிம் இடத்தை நிரப்பி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றும் திறமையும் தரமும் கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால் அதில் ஒருவராக இருப்பார். அவரை நான் 3 விதமான கிரிக்கெட்டிலும் அசத்துப் போவதாக பார்க்கிறேன்”

“ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளார். 2வது பெயராக சுப்மன் கில்லை நான் எடுப்பேன். பேட்டிங் துறையைப் பற்றி நாம் பேசும் போது இந்த இருவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று வருங்காலத்தில் அசத்தும் அளவுக்கு திறமை கொண்ட வலுவான வீரர்கள். அதே போல சாய் சுதர்சன் நான் விரும்பும் மற்றொரு வீரர்”

- Advertisement -

“ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடந்து வரும் வளரும் வீரர்களுக்கான தொடரில் சதமடித்தார். எனவே அவரும் வருங்காலத்தில் நல்ல வீரராக உருவெடுப்பார் என்று நான் கருதுகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான சுப்மன் கில் 2021இல் பதிவு செய்யப்பட்ட மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் முதல் சீசனிலேயே கோப்பையை வெல்வதற்கு அதிக ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்.

மேலும் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்த அவர் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சதமும் இரட்டை சதமும் விளாசினார். அதனால் சச்சின், விராட் கோலி ஆகியோரின் வரிசையில் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அவரைப் போலவே 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து 3 விதமான உள்ளூர் தொடர்களிலும் அசத்திய ஜெய்ஸ்வால் ஐபிஎல் 2023 தொடரில் 625 ரன்கள் குவித்து அதிவேகமாக 50 ரன்களை கடந்து சரித்திரம் படைத்தார்.

- Advertisement -

அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெற்று அறிமுக போட்டியில் சதமடித்த அசத்திய அவரை போல தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கடந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அசத்தினார்.

இதையும் படிங்க:ஒரு வருஷம் ஆகப்போகுது.. இந்திய அணியில் இணையப்போகும் பும்ரா. எந்த தொடரில் தெரியுமா? – வெளியான நற்செய்தி

அதன் உச்சமாக இந்த ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமாக செயல்பட்டு சென்னைக்கு எதிரான ஃபைனலில் 96 ரன்கள் குவித்த அவர் டிஎன்பிஎல் தொடரிலும் அசத்தியதுடன் இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வீரர்களுக்கான வரும் ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -