உலகம் முழுவதுமே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸின் ஆதிக்கம் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் எந்த விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிரிக்கெட் போட்டிகளும் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. அடுத்து கிரிக்கெட் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இந்த ஓய்வு நேரத்தை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி தற்போதைய வீரர்களும் சமூக வலைதளம் மூலம் தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பல முன்னாள் வீரர்கள் தங்களுக்கு பிடித்த ஆல்டைம் பெஸ்ட் லெவன் (11 வீரர்கள்) கொண்ட அணிகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அவரது ட்விட்டர் பக்கத்தில் all-time ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதில் இந்திய அணியின் ஜாம்பவான் துவக்க ஜோடியான சச்சின் மற்றும் கங்குலியை ஆகியோரை துவக்க வீரர்களாக தேர்வுசெய்துள்ளார்.
All time India ODI XI
1 @sachin_rt
2 @SGanguly99
3 @ImRo45
4 @imVkohli
5 @YUVSTRONG12
6 @msdhoni (wk/c)
7 @therealkapildev
8 @imjadeja/@harbhajan_singh
9 @anilkumble1074
10 @ImZaheer
11 @Jaspritbumrah93PS: This is entirely in my opinion. #QuarantineLife#srt #dhoni #kohli
— Wasim Jaffer (@WasimJaffer14) June 9, 2020
1) சச்சின்
2) கங்குலி
3) ரோஹித்
4) விராட் கோலி
5) யுவராஜ் சிங்
6) தோனி (கீப்பர்&கேப்டன்)
7) கபில்தேவ்
8) ஜடேஜா (அ) ஹர்பஜன்
9) கும்ப்ளே
10) ஜாஹிர் கான்
11) பும்ரா
மேலும் இந்திய அணியில் 1983 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற கேப்டனான கபில் தேவுக்கு ஆல்ரவுண்டராக அணியில் இடம் கொடுத்துள்ளார். இந்த பட்டியலில் ரோஹித், கோலி, யுவராஜ், தோனி ஆகியோருக்கும் இடம் கொடுத்துள்ளார். இந்த அணியில் அதிரடி துவக்க வீரரான சேவாக்கிற்கு இடமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அணியில் கபில் தேவ் மற்றும் கங்குலி போன்ற சிறப்பான கேப்டன்கள் இருந்தும் அவர் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனியை கீப்பர் மற்றும் கேப்டனாக நியமித்துள்ளார். இவரது இந்த தேர்வு குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவு விவாதிக்கப்பட்டு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அளித்து வருகின்றனர்.