IND vs AUS : சஹால் சரிப்பட்டு வரமாதிரி தெரியல, டி20 உ.கோப்பையில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை

Chahal
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா அடுத்த 2 போட்டிகளில் வென்று கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் மோசமான பௌலிங் காரணமாக வெற்றியை தாரை வார்த்த இந்திய பவுலர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். அதிலும் அக்சர் படேல் தவிர எஞ்சிய அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

Chahal

குறிப்பாக மிடில் ஓவர்களில் விக்கெட்டுக்களை எடுக்க வேண்டிய முதன்மை சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வென்ற சஹால் முழுமையான 4 ஓவர்களை வீச முடியாத அளவுக்கு 3.2 ஓவரில் 42 ரன்களை 12.60 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசியது உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு கவலையாக மாறியுள்ளது. கடந்த வருடம் இதே போல் சுமாராக செயல்பட்டதால் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் அதிரடியாக நீக்கப்பட்ட இவர் அதன்பின் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் ஊதா தொப்பியை வென்று பார்முக்கு திரும்பி கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

தடுமாறும் சஹால்:
அதன் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற சமீபத்திய டி20 தொடர்களில் அசத்தலாக செயல்பட்டதால் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பெரும்பாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாத அவருடைய சுமாரான செயல்பாடு இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இங்கு விஷயம் என்னவெனில் வேகத்துக்கு ஓரளவு கை கொடுக்கக்கூடிய துபாயிலேயே தடுமாறிய அவர் முழுக்க முழுக்க வேகத்துக்கு கைகொடுத்து சுழலுக்கு சவால் கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியுமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

இந்நிலையில் சுழலுக்கு கைகொடுக்காத ஆடுகளங்களில் தடுமாறும் சஹாலுடைய பவுலிங் தமக்கு கவலையளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் அவருக்கு பதில் சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய ரவி பிஷ்னோய் சிறந்த பவுலராக செயல்படுவார் என்று கூறியுள்ளார். உலகக்கோப்பைக்கான ஸ்டேண்ட் பை லிஸ்டில் ரவி பிஷ்னோய் உள்ள நிலையில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கால சூழ்நிலைகள் அவருக்கு (சஹால்) எதிராக இருப்பதை நான் பார்க்கிறேன். அத்துடன் அவரிடம் நிறைய வெரைட்டியும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் உலகக் கோப்பையில் யுஸ்வென்ற சஹாலை என்னுடைய முதன்மை சுழல் பந்து வீச்சாளராக அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கிறது. அதே சமயம் அவருக்கு பதிலாக நான் ரவி பிஷ்னோயை விரும்புகிறேன். அவர் உங்களுக்கு சற்று வித்தியாசமான முடிவுகளை கொடுப்பார்”

Jaffer

“பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடினாலும் அவர் (பிஷ்னோய்) கடினமான ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். அத்துடன் முதன்மை அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்தாலும் அவரிடமும் சாஹலிடமும் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது தெரியும். ஆனால் நான் அவர்களை விட பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருப்பதை விரும்புகிறேன். ஏனெனில் சஹால் இதுபோல் பந்து வீசுவது எனக்கு கவலையளிக்கிறது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமாகி திறமையான இளம் லெக் ஸ்பின்னராக இருக்கும் ரவி பிஷ்னோய் அழுத்தமான சூழ்நிலைகளிலும் தைரியமாகப் பந்து வீசும் மனதைரியம் கொண்டவர். மேலும் மைதானம் சுழலுக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் பந்து வீசும் வேகத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி எதிரணியை தாக்கும் திறமை பெற்றுள்ள அவர் தற்சமயத்தில் சஹாலை விட நல்ல பார்மில் இருக்கிறார்.

bisnoi

எடுத்துக்காட்டாக 2022 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தமான சூப்பர் 4 போட்டியில் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தாலும் 43 ரன்களை வழங்கிய சஹால் 10.75 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசினார். மறுபுறம் அதே 4 ஓவர்களை வீசிய பிஷ்னோய் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் முதுகெலும்பான பாபர் அசாமின் விக்கெட்டை எடுத்து 26 ரன்கள் மட்டும் கொடுத்து 6.50 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement